Kadakam Rasi Guru Peyarchi Palangal 2018-2019 in Tamil

கடக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 

அன்பார்ந்த கடக ராசி நேயர்களே!

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 08.39 மணிக்கு குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

தங்களது ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 5 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 9 ஆம் இடம் 11 ஆம் இடம் மற்றும் 1ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 9 ஆம் இடம் மேற்படிப்பு மற்றும் அயல் நாட்டுப் பயணத்தை குறிக்கும். 11 ஆம் இடம் லாபம் மற்றும் விருப்பங்கள் நிறைவேற்றுதலைக் குறிக்கும். 1 ஆம் இடம் தேக நலம், மன நலம் மற்றும் வெற்றி தோல்வியைக் குறிக்கும்.

கடக ராசி – தொழிலும் வியாபராமும்:

இக் காலக் கட்டத்தில் தொழிலில் தங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் உண்டு. உங்களது அனுபவங்களை உடன் பணி புரிவோரிடம் பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் அவர்களும் பயனுறுவர். வியாபாரத்தில் சவாலான சூழ்நிலைகள் இருந்தாலும் அதனை சாதுரியமாக கையாளும் பக்குவம் உங்களிடம் இருக்கும். பல வேலைகளை சாதிக்கக் கூடிய திறமைகள் இக் காலக்கட்டத்தில் மெருகேறும்.

கடக ராசி – பொருளாதாரம்:

பொருளாதார உயர்வு உண்டு. புதிய வாய்ப்புகள் வந்து சேரும். நல்ல சேமிப்புகளுக்கு இடமுண்டு. கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளும் கண்ணுக்கு புலப்படுகின்றது.

கடக ராசி – குடும்பம்:

குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். அண்டை அயலார் அனுசரனையாக இருப்பர். வீட்டில் வயதானவர்களின் வழி காட்டுதல்கள் கைகொடுக்கும். சுப விசேஷங்களுக்கு இடமுண்டு.

கடக ராசி – கல்வி:

உயர் கல்விக்கான வாய்ப்புகள் அதிகம். நல்ல மதிப்பெண்களைப் பெற்று கல்வி நிறுவனங்களில் பரிமளிக்க முடியும். தங்களது திறமைகளை வெளிக்காட்ட சரியான சந்தர்ப்பம் உருவாகும்.எந்தத் துறையாக இருந்தாலும் அதில் பளிச்சிட முடியும்.

கடக ராசி – காதலும் திருமணமும்:

இளைஞர்கள் காதல் வலையில் விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உறவில் புரிதல் உண்டு. திருமண வாய்ப்புகள் தெரிகிறது. விட்டுக் கொடுத்தலால் உறவுகள் வலுப்படும். விருப்பங்கள் நிறைவேறக் கூடிய காலம் இது.

கடக ராசி – ஆரோக்கியம்:

தேக ஆரோக்கியம் பேண முடியும். உணவு முறைகளில் ஒரு ஒழுக்கம் கடைபிடித்தால் அதுவே போதுமானது.

மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

  • தொழிலில் அங்கீகாரம்
  • நிதிவரவு பெருகுதல்
  • பொருளாதார மேன்மை
  • சுமுக உறவு
  • உயர் கல்வி வாய்ப்பு
  • திருமண வாய்ப்புகள்
  • தேக ஆரோக்கியம்

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபடுவதால் நற்பலன்கள் கூடும்.