ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் துலாம் | Thulam Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil

Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள்

நவக்கிரகங்களில் சாயா கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் கிரகங்கள் ராகுவும் கேதுவும். இவ்விரு நிழல் கிரகங்களுக்கு தனி வீடுகள் என்பது கிடையாது. ஆகவே இந்த கிரகங்கள் 12 ராசி வீடுகளில் எந்த வீட்டில் இருக்கின்றனரோ அந்த வீட்டின் ஆதிக்கத்தை எடுத்துக் கொள்வார்கள். போக காரகனான ராகுவும்,ஞான காரகன் ஆன கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து இருக்கின்ற வீடுகளுக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள்.

அந்தவகையில்,ராகு பகவான் தற்போது மேஷ ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 30 ம் தேதிக்கு பிறகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் அதாவது 2025 மே மாதம் வரை மீன ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்,
கேது பகவான் தற்போது துலாம் ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 30 ம் தேதிக்கு பிறகு துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் அதாவது 2025 மே மாதம் வரை கன்னி ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்.

சர்ப்ப கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகுவும் கேதுவும் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள். அத்தகைய ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 துலாம் ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை அளிக்கப் போகிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Thulam Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் துலாம்

துலாம் ராசி அன்பர்களே கடன் கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனம் தேவை. முன் பின் யோசிக்காமல் வாக்குறுதிகளை அளித்தால் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 துலாம்

துலாம் ராசி நேயர்களே முன் கோபம் அதிகம் இருந்தாலும் தன்னுடைய வாக்கு சாதிரியத்தால் பிறரை கவர்ந்திழுக்கும் ஆற்றல் கொண்டவர்கள். சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது, கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்படும் சிறு சிறு சிக்கல்களை எதிர்கொள்ள முடியும். கடந்த கால உடல்நிலை பாதிப்பு விலகும் என்றாலும், உணவு விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை சற்று சாதகமாக இருக்கும் நிலை பெற்றோர்களின் ஆதரவு மூலம் குடும்பத்தில் நல்லது நடக்கும் வாய்ப்பு உண்டாகும். தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறு அசையும் அசையா சொத்து வழியில் சுபச் செலவுகள் ஏற்படும் .பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 துலாம் – தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எப்படி இருக்கும்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கூட்டாளிகளையும் வேலைகளையும் அனுசரித்து செல்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வது நல்லது. போட்டிகள் அதிகமாக இருப்பதால் எதிலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வளமான பலனை அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும் அவர்களை கலந்து ஆலோசித்து எந்த முடிவுகளையும் எடுப்பதும் நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் மேன்மைகள் உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்க இறையூறுகள் ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபடி நிலை நீடிக்கும். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – துலாம் உத்தியோகஸ்தர்களுக்கு எப்படி இருக்கும்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலைப்பளு அதிகமாக இருப்பதால் உடல்நிலை சோர்வடையும். இருக்கும் பணிகளை திறம்பட செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். தேவையற்ற அலைச்சல் மன அழுத்தங்கள் ஒன்றாக கூடிய காலம் என்பதால், பயணங்களை தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிலும் திறமையுடன் செயல்பட முடியும் என்றாலும், அதற்கான சன்மானம் குறைவாகவே கிடைக்கும். வேலைப்பளு அதிகரிப்பதால் உடல் அசதி ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகள் தாமதமாகும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமாக இருந்தால் நல்ல நிலையை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் உயர்வான நிலையை அடைய முடியும்.

புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது மூலம் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும். தற்போது சில நெருக்கடிகளை நீங்கள் எதிர்கொண்டாலும், உங்களது பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தாராள தன சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும்.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – துலாம் குடும்பம் எப்படி இருக்கும்

குடும்பம் பொருளாதார நிலையைப் பொறுத்த வரை, பணவரவுகள் சாதகமாக இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுப காரியம் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு நற்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் வீண் செலவுகள் உண்டாகும்

திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்லது நடக்கும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. உங்களின் விடாமுயற்சியால் எதையும் எதிர்கொள்வீர்கள். எந்த ஒரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் உடல் சோர்வு ஏற்படும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளால் மன நிம்மதி குறையும். தூரப்பயணங்கள் உங்களுக்கு அலைச்சலை தந்தாலும், அதனால் பொருளாதாரம் அனுகூலங்கள் உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – துலாம் அரசியல்வாதிகளுக்கு எப்படி இருக்கும்

அரசியல்வாதிகளுக்கு உங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பத்திரிக்கை நண்பர்களை அனுசரித்து செல்வது உத்தமம். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயர் எடுப்பீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்வதால், உங்கள் கையிருப்பு குறையும். தூர பயணங்கள் காரணமாக உடல் அசதி ஏற்படும். வெளியூர் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், அதனால் அலைச்சல் ஏற்படும். பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்களால் மன நிம்மதி குறையும். உடன் இருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம்.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – துலாம் பெண்களுக்கு எப்படி இருக்கும்

பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும், அன்றாட பணிகளில் ஓரளவுக்கு சுறுசுறுப்பாக செயல்பட முடியும். மாணவ மாணவியருக்கு கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுப்பீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். தேவையற்ற பொழுதுபோக்குகளால் மனம் வேறு பாதைகளுக்கு மாறி செல்லும். போட்டி தேர்வுகளில் சற்று கவனமுடன் செயல்படுவதும் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும் மிகவும் நல்லது. கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 6, 7, 8

அதிஷ்ட நிறம்: வெள்ளை, பச்சை

அதிஷ்ட கிழமைகள்: வெள்ளி, புதன்

அதிர்ஷ்ட கல்: வைரம்.

அதிஷ்ட திசை: தென்கிழக்கு

துலாம் ராகு கேது பெயர்ச்சி 2023-2025 பரிகாரம்

  • விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
  • செவ்வரளி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வதால் நன்மை விளையும்.
  • ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது.
  • சனிக்கிழமைகளில் தேங்காய் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது.
  • அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

ராகு கேது பெயர்ச்சி 2023, 2024 எப்போது