Diwali recipes – Apple Halwa

கோதுமை ஆப்பிள் அல்வா

தேவையான பொருட்கள்

ஆப்பிள் – இரண்டு (தோல் நீக்கி துருவி கொள்ளவும்)
கோதுமை மாவு – ஒரு கப்
நெய் – தேவையான அளவு
முந்திரி – பத்து நம்பர்
பால் – 35௦ மில்லி லிட்டர்
ஏலக்காய் தூள் – ஒரு டீஸ்பூன்
கலர் பவுடர் – சிறிதளவு
சர்க்கரை – 1௦௦ கிராம்

செய்முறை

* கடாயில் நெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

* அதே கடாயில் கோதுமை மாவு சேர்த்து லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

* பின், வறுத்த கோதுமை மாவை தண்ணீரில் இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பால், ஏலக்காய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து துருவிய ஆப்பிள் சேர்த்து கிளறவும்.

* பின், கரைத்த கோதுமை மாவு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

* சர்க்கரை சேர்த்து கிண்டவும். பிறகு, நெய், கலர் பவுடர் சேர்த்து கிளறவும்.

* இறுதியில், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து அல்வா பதம் வந்ததும் இறக்கி விடவும்.