Diwali Recipes – Beetroot Vadai

பீட்ரூட் வடை

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – ஒரு கப் (ஒரு மணி நேரம் ஊறவைத்தது)

பீட்ரூட் – ஒரு கப் (துருவியது)

சோம்பு – ஒரு டீஸ்பூன்

கரிவேபில்லை – சிறிதளவு

பூண்டு – நான்கு பல்

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

பச்சை மிளகாய் – இரண்டு

காய்ந்த மிளகாய் – இரண்டு

உப்பு – தேவைகேற்ப

பெருங்காயம் – சிறிதளவு

பொட்டு கடலை மாவு – தேவைகேற்ப

வெங்காயம் – மூன்று (பொடியாக நறுக்கியது)

கடலை பருப்பு – இரண்டு டீஸ்பூன் (அரை மணி நேரம் ஊறவைத்தது)

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

* ஒரு கிண்ணத்தில் ஊறவைத்த துவரம் பருப்பு, பீட்ரூட், சோம்பு, கரிவேபில்லை, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், பொட்டு கடலை மாவு தேவைகேற்ப சேர்த்து அனைத்தையும் விழுதாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும்.

* பிறகு, அதில், வெங்காயம், ஊறவைத்த கடலை பருப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

* தண்ணியாக இருந்தால் சிறிதளவு பொட்டு கடலை மாவு சேர்த்து கொள்ளலாம்.

* சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.