காளான் பன்னீர் வடை
தேவையான பொருட்கள்
காளான் – அரை கப் (பொடியாக நறுக்கியது)
பன்னீர் – அரை கப் (துருவியது)
கரிவேபில்லை –சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
சோம்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் பொடி – ஒரு டீஸ்பூன்
கடலை மாவு – இரண்டு டீஸ்பூன்
அரிசி மாவு – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
*ஒரு கிண்ணத்தில் காளான், பன்னீர், கரிவேபில்லை, சோம்பு, காய்ந்த மிளகாய் பொடி, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
*பிறகு, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.