Diwali Recipes – Kambu Puttu

கம்பு புட்டு

தேவையான பொருட்கள்

கம்பு – ஒரு கப்
உப்பு – தேவைகேற்ப
நெய் – ஒரு தேகரண்டி
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
சர்க்கரை – தேவைகேற்ப
தேங்காய் துருவல் – கால் கப்
முந்திரி – ஒரு டீஸ்பூன்
திராட்சை – ஒரு டீஸ்பூன்
பிஸ்தா – ஒரு டீஸ்பூன்

செய்முறை

* கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை, பிஸ்தா போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
* ஒரு கிண்ணத்தில் கம்பு மாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
* பிறகு, அதில் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக பிசைந்து கொள்ளவும்.
* பிறகு, இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் ஆவி கட்டவும். பின், எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு உதிர்த்து கொள்ளவும்.
* பிறகு, அதில் ஏலக்காய் தூள், நெய் சிறிதளவு, தேங்காய் துருவல், சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.