மிக்ஸர்
தேவையான பொருட்கள்
பூந்தி – அரை கிலோ
ஓமப்பொடி – அரை கிலோ
முந்திரி – 1௦௦ கிராம்
பட்டாணி – 1௦௦ கிராம்
நிலக்கடலை – 1௦௦ கிராம்
நெய் – நான்கு தேகரண்டி
காய்ந்த மிளகாய் – பத்து
கொப்புரை துண்டுகள் – 1௦௦ கிராம்
அவல் – 1௦௦ கிராம்
செய்முறை
பூந்தி, ஓமப்பொடி இரண்டையும் நன்றாக கலக்கவும். கடாயில் நெய் விட்டு கொப்புரை துண்டுகள், அவல் சேர்த்து பொரித்து எடுக்கவும்.
இன்னொரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி, பட்டாணி, நிலக்கடலை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
எண்ணையில் காய்ந்த மிளகாய் வறுத்து நறநறவென பொடி செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஓமப்பொடி மற்றும் பந்தி கலவை, வறுத்த முந்திரி, பட்டாணி, நிலக்கடலை, கொப்புரை துண்டுகள், அவல், பொடி செய்த காய்ந்த மிளகாய், நெய் ஊற்றி நன்றாக கலக்க்கவும்.
சுவையான மிக்ஸர் ரெடி.