Diwali Recipes – Mundhiri parfi

முந்திரிப் பருப்பு பர்பி

தேவையான பொருட்கள்

முந்திரி பருப்பு – இரண்டு கப்

மைதா மாவு – இரண்டு கப்

சர்க்கரை – ஆறு கப்

தண்ணீர் – அரை கப்

நெய் – நான்கு கப்

செய்முறை

*கடாயை சூடு செய்து அதில் முந்திரி பருப்பு போட்டு லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை, முந்திரி பருப்பு பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிடவும்.

*கொதித்த பின் மைதா மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிவிடாமல் கிளறவும்.

*பாத்திரத்தில் ஓட்டும் போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி கிளறவும்.

*கெட்டியாக வந்தவுடன் ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி கொஞ்சம் ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்..