Navarathri Recipes – Rajma Katta Mitta

ராஜ்மா கட்டா மிட்டா

என்னென்ன தேவை? 

கறுப்பு ராஜ்மா-ஒரு கப், 
பச்சை மிளகாய்-2, 
வெல்லம்-சிறிய துண்டு, 
எலுமிச்சைச் சாறு-2 டேபிள்ஸபூன், 
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன், 
கடுகு,சீரகம்-தலா கால்டீஸ்பூன், 
கறிவேப்பில்லை, நறுக்கிய கொத்தமல்லி-சிறிதளவு, 
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம்,  கறிவேப்பில்லை, கீறிய பச்சைமிளகாய் சேர்த்து தாளிக்கவும். வெந்த ராஜ்மா, உப்பு சேர்க்கவும். வெல்லத்தை சிறிது நீரில் கரைத்து, வடிகட்டி  சேர்க்கவும். எல்லாம் நன்கு கலந்தவுடன் கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கினால்…. புளிப்பும், இனிப்பும் கலந்த மிட்டா சுண்டல்  ரெடி!..