இல்லங்களில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது நாம் இறைவழிபாடுகளில் முக்கியமானதும் நாம் தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் வழக்கமாகவும் உள்ளது. இப்படி வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவதால் என்ன பலன்?
வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது, விளக்கின் சுடரில் இருந்து வரும் ஒளி சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களையும் எதிர்மறையான சக்திகளையும் போக்கவல்லது.
காலையில் விளக்கு ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள்
காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.
மாலையில் விளக்கு ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள்
மாலை 4.30 – 6.00 சிவனுக்கு உகந்த பிரதோஷ வேளையாகவும், நரசிம்ம மூர்த்திக்கும் உகந்த நேரமும் ஆகும். இந்த நேரத்தில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.