பிரதோஷ வழிபாடு பலன்கள் | Pradosha Pooja Benefits

பிரதோஷ வழிபாடு பலன்கள் | Pradosha Pooja Benefits

  • தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை நேரத்தில் அதாவது சூரியன் மறைவதற்கு ஒரு மணி நேரம் முந்திய காலமும் சூரியன் மறைந்த பின் ஒரு மணி நேரமும் உரிய காலமே பிரதோஷ காலம் எனப்படுகிறது. இத்தகைய பிரதோஷ காலத்தில் சிவனை தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.
  • சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.
  • பிரதோஷ பூஜை மேற்கொள்ளும்போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும்.
  • எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து, சங்குப்பூ வைத்து வழிபட்டால் மிகச் சிறப்பான பலன் கிடைக்கும்.
  • பிரதோஷ பூஜையில் பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம்.
  • பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
  • வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
  • மேலும், தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்னைகள் தீரும். போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.
  • பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

பிரதோஷ நந்தி பாடல்கள் | Pradosha Nandi Padal