Karuvalarcheri Temple Turmeric Pooja for getting Pregnant | கருவளர்ச்சேரி அம்பாள் மஞ்சள் பூஜை
கும்பகோணம் அருகில் உள்ள மருதநல்லூர் அருகில் திரு கருவளர்சேரி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரி, கருவளர்த்த நாயகியாக நின்று குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியத்தை வாரி வழங்கும் அன்னையாக இருக்கிறாள்.
இங்கே அன்னைக்கு, கருவறையின் நிலைபடியில் நெய்யால் படி பூஜை செய்த பின்பு தேவிக்கு சமர்பிக்கப்பட்ட மஞ்சள்கட்டைகள் மற்றும் எலுமிச்சம் பழம் பிரசாதம் ஆக தம்பதியர்களுக்கு வழங்கப்படும்.
இந்த பிரசாத எலுமிச்சம் பழத்தை தம்பதியர் இருவரும் வீட்டிற்கு வந்த பின்பு ஜூஷ் செய்து தம்பதியர் மட்டுமே குடிக்க வேண்டும்.
பிரசாதமாக அளிக்கப்பட்ட மஞ்சள் கட்டைகளை, தம்பதியரில் மனைவி மட்டும் தினமும் குளிக்கும் போது தேய்த்து குளிக்க வேண்டும். இடுப்புக்கு கீழ் உள்ள உடல் பாகங்களில் மஞ்சள் தேய்ப்பதை தவிர்க்கவும். மற்றும் கணவன் ஊரில் இல்லாத நாட்களில் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும்.
இங்கே ஏழு மஞ்சள் கட்டைகள் பிரசாதமாக அளிக்கப்படும். அவை தேய்ந்து முடிப்பதற்க்குள் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.