வரலட்சுமி பூஜை பொருட்கள் | Varalakshmi Pooja Items

வரலட்சுமி பூஜை பொருட்கள் | Varalakshmi Pooja Items

வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்கள்

வரலக்ஷ்மி தேவியை வீட்டிற்குள் அழைத்து அமர வைக்கும் பூஜை மண்டபத்திற்கு தேவையான அலங்கார பொருட்கள்.

  • சின்ன வாழைக்கன்று இரண்டு
  • மாவிலை தோரணம் அல்லது பூ தோரணம்
  • மாவிலை
  • முகம் பார்க்கும் கண்ணாடி (அம்மனின் பின் அலங்காரத்தை ரசிக்க)
  • அலங்கார சீரியல் மின் விளக்கு. அதை இணைக்க தேவையான extension cord.
  • பூச்சரம் அம்மன் அலங்காரத்திற்கு மற்றும் உதிரி பூக்கள்
  • அம்மனை வைக்க சொம்பு.
  • காதோலை இரண்டு பக்கமும் வைக்க
  • கருக வளையல் இரண்டு பக்கமும் வைக்க
  • மாவிலைக்கொத்து, தேங்காய் மற்றும் அம்மன் வைக்க
  • தாழம்பூ ( கிடைத்தால் அதை கருக வளையலில் சேர்த்து இரு பக்கமும் வைக்கலாம்)
  • ஜடை அலங்காரம் இப்போது பூக்கடைகளில் கிடைக்கிறது.
  • சொம்பிற்கேற்ப சிறிய தேங்காய் (மஞ்சள் தடவிய தேங்காய்).
  • சிறிய வாழை இலை. அதில் அரிசியை பரப்பி, அம்மனை வைக்க
  • புதிய ரவிக்கை துண்டு அல்லது பட்டு துணி (அம்மனுக்கு சாத்த)
  • தாமரை பூக்கள்

பூஜைக்கு தேவையான பொருட்கள்

  • திருவிளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி.
  • பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள் (அர்ச்சனைக்கு)
  • பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள்
  • மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு மற்றும் அவைகளை வைக்க கின்னங்கள்
  • ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி
  • மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு.
  • பஞ்ச பாத்திரம், உத்தரினி.
  • இழை(மா)க்கோலம் போட தேவையான பொருட்கள்
  • மஞ்சள் சரடு அதற்கு கட்ட பூ.
  • அர்க்கியம் விட கொஞ்சம் பால்