Tag «நட்சத்திர அதிதேவதை»

Nakshatra Song for Birth Star Hastham

அஸ்தம் : வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்று ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு நின் கழல்கள் காணப் பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும் ஆதியே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.

Nakshatra Song for Birth Star Uthiram

உத்திரம் : போழும் மதியும் புனக் கொன்றைப் புனர்சேர் சென்னிப் புண்ணியா! சூழம் அரவச் சுடர்ச் சோதீ உன்னைத் தொழுவார் துயர் போக வாழும் அவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்து ஆட்ட ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளே.  

Nakshatra Song for Birth Star Pooram

பூரம் : நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை ஆல் அடைந்த நீழல் மேவி அருமறை சொன்னது என்னே சேல் அடைந்த தண்கழனிச் சேய்ன்ஞலூர் மேயவனே.

Nakshatra Song for Birth Star Magam

மகம் : பொடி ஆர் மேனியனே! புரிநூல் ஒருபால் பொருந்த வடி ஆர் மூவிலை வேல் வளர் கங்கையின் மங்கையொடும் கடிஆர் கொன்றையனே! கடவூர் தனுள் வீரட்டத்து எம் அடிகேள்! என் அமுதே! எனக்கு ஆர்துணை நீ அலதே.

Nakshatra Song for Birth Star Poosam

பூசம் : பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய மூர்த்திப் புலி அதளன் உருவுடை அம்மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.  

Nakshatra Song for Birth Star Kiruthigai

கார்த்திகை/கிருத்திகை : செல்வியைப் பாகம் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார் மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக் கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளார் எல்லிய விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே.

Nakshatra Song for Birth Star Thiruvathirai

திருவாதிரை/ஆதிரை : கவ்வைக் கடல் கதறிக் கொணர் முத்தம் கரைக்கு ஏற்றக் கொவ்வைத் துவர் வாயார் குடைந்து ஆடும் திருச்சுழியல் தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார் அவ்வத் திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே.  

Nakshatra Song for Birth Star Punar Poosam

புனர்பூசம் : மன்னும் மலைமகள் கையால் வருடின மாமறைகள் சொன்ன துறைதொறும் தூப்பொருள் ஆயின தூக்கமலத்து அன்னவடிவின அன்புடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி இன்னல் களைவன இன்னம்பரான் தன் இணை அடியே.

Nakshatra Song for Birth Star Rohini

ரோகிணி : எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் அங்கே வந்து என்னோடும் உடன் ஆகி நின்றருளி இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே.