Tag «ஐயப்பன் பஜனை பாடல்கள்»

Makarathin Manivilakku Manikandan Arul Vilakku – K. Veeramani Ayyappan Songs

மகரத்தின் மணிவிளக்கு மணிகண்டன் அருள் விளக்கு இறைவனின் திருவிளக்கு எந்நாளும் துணை நமக்கு (மகரத்தின்) அமைதியின் ஒளிவிளக்கு ஐயப்பனே குலவிளக்கு சபரிமலை விளக்கு…. விளக்கு நல்வாழ்வின் வழி நமக்கு (மகரத்தின்) தலைவனின் சுடர் விளக்கு தைமாதத் தனி விளக்கு ஆண்டுக்கு ஒரு விளக்கு அதைக் காணும் பணி நமக்கு (மகரத்தின்) நெய்யால் திகழ் விளக்கு நினைத்ததெல்லாம் தரும் விளக்கு தெய்வத்தவ‌ விளக்கு திருக்காட்சி உயிர் நமக்கு (மகரத்தின்)

Aadhiyum Neeye Anthamum Neeye Harihara Suthane – K. Veeramani Songs

ஆதியும் நீயே அந்தமும் நீயே அரிஹர‌ சுதனே ஐயப்பா மாதவ‌ மணியே மாணிக்க‌ ஒளியே மணிகண்ட‌ சாமியே ஐயப்பா (ஆதியும் நீயே) நீதியின் குரலே நித்திய‌ அழகே நெஞ்சத்தின் நினைவே ஐயப்பா நாதத்தின் உயிரே நம்பிக்கை வடிவே நானிலம் போற்றிடும் ஐயப்பா (ஆதியும் நீயே) காலையில் கதிரே மாலையில் மதியே கற்பூர‌ ஜோதியே ஐயப்பா ஆலய‌ அரசே அன்பின் பரிசே அபிஷேகப் ப்ரியனே ஐயப்பா (ஆதியும் நீயே) குழைந்தையும் நீயே தெய்வமும் நீயே கருணாகரனே ஐயப்பா மழலையின் …

Oongara Naatham Uyarvana Vedham – K. Veeramani Ayappan Songs

ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம் தேனான‌ கீதம் சாஸ்தா உன் நாமம் (ஓங்கார‌) ஒருகோடி தீபம் ஒளிவீசும் கோலம் அருளாகத் தோன்றும் ஐயா உன் ரூபம் பனிதூவும் மாதம் மணிமாலை போடும் மனம் யாவும் பாடும் தேவா உன்கோஷம் (ஓங்கார‌) பம்பாவின் நீரில் பிணியாவும் தீரும் படியேறும் போதே நலம் கோடி சேரும் மலையெங்கும் வீசும் அபிஷேக‌ வாசம் மனைவாழச் செய்யும் மணிகண்ட‌ கோஷம் (ஓங்கார‌) காலங்கள் தோறும் உன் நாமம் பாடும் மனமொன்று போதும் வேறென்ன‌ …

Saranam Solli Koopiduvom Sabarimalai Vasanai – K. Veeramani Ayyappan Songs

சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை வாசனை வரணும் என்று அழைத்திடுவோம் வரம் கொடுக்கும் ஈசனை அருளைத் தரும் ஆண்டவனை அன்பருக்கு மித்திரனை சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் ஹரிஹர‌ சுதன் ஐயப்பனை வில்லாளி வீரனே வீரமணிகண்டனே தமிழ் சொல்லெடுத்துப் பாடுவோம் சுந்தரேசர் மைந்தனை ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா || சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை பயம் தனையே போக்கிடுவான் பந்தளத்தின் பிள்ளை அபயம் என்று சரணடைந்தால் அகன்றிடும் தொல்லை அவனின்றி அவனியிலே அணூவும் அசைவதில்லை …

K. Veeramani Ayyappan Songs – Pambai Nathikaraiye Unthan

பம்பை நதிக்கரையே… உந்தன் பெருமைக்கு இணை இல்லையே அரிஹரன் திருவருளே நீதான் அறிந்தாய் முதன் முதலே ஆயிரம் கோடி பக்தர்கள் பாடி. (பம்பை). தொழுவார் ஐயப்பன் திருவடியில் அந்த ஐயப்பனே ஒரு குழந்தையின் வடிவில் அருள் மழை பொழிந்தது உன் மடியில் அருள் மழை பொழிந்தது உன் மடியில். (பம்பை). அடைக்கலம் என்று இருமுடி ஏந்தி அனுதினம் வருவார் கோவிலிலே அவரவர் மனதில் அருளாய் இறங்கி கருணையை பொழிவான் வாழ்வினிலே கருணையை பொழிவான் வாழ்வினிலே. (பம்பை). சரணம் …

Enge Manakuthu Santhanam Enge Manakuthu – K. Veeramani Ayyappan Songs

சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே எங்கே மண‌க்குது சந்தனம் எங்கே மணக்குது ஐயப்பசுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது என்ன‌ மணக்குது மலையில் என்ன‌ மணக்குது இன்பமான‌ ஊதுவத்தி அங்கே மணக்குது (எங்கே மண‌க்குது) எங்கே மண‌க்குது நெய்யும் எங்கே மணக்குது வீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குது திருநீறும் மண‌க்குது பன்னீரும் மண‌க்குது ஆண்டவனின் சன்னதியில் அருளும் மண‌க்குது ஐயப்பன்மார்கள் …

Dharisanam Kanden Paravasam Konden – K. Veeramani Ayyappan Songs

தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன் அரிஹரன் மைந்தனை சபரிமலை தன்னில் (தரிசனம்) தர்மத்தை காக்கவே தரணியில் பிறந்தவனை ஆ…ஆ… கர்மவினை தீர்க்கும் கருணையில் சிறந்தவனை வைதாலும் அவர் வாழவழி காட்டும் மன்னவன் (தரிசனம்) வாயார‌ வாழ்த்தி நின்றால் வந்தருள் செய்பவன் மெய்யப்பன் ஐயப்பன் மேன்மை தரும் பாடல் தையினில் ஜேததியாய் திகழ்ந்திடும் நாதனை (தரிசனம்) ஐந்து மலைக்கரசன் ஐந்தெழுத்தானவன் ஐயங்கரன் தம்பியவன் ஐஸ்வர்யதாயகன் சிந்தையில் நின்றாடும் பந்தள‌ பாலகன் சிம்மையன் எம்மையன் சுகம் தரும் நாயகனை (தரிசனம்)

K. Veeramani Ayyappan Bajanai Songs – Kaadumalai Kadanthu Vanthom Ayyappa

காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா காண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா மாய‌ (ஐயப்பா) வீடுதனை மறந்து வந்தோம் ஐயப்பா சபரி வீடுதனைத் தேடி வந்தோம் ஐயப்பா (ஐயப்பா) நெய்யபிஷேகம் பாலபிஷேகம் தேனபிஷேகம் சாமிக்கே சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப‌ சாமிக்கே ஏட்டினிலே எழுத‌ வைத்தாய் ஐயப்பா எங்கள் பாட்டினிலே எழுந்து வந்தாய் ஐயப்பா நாங்கள் பேட்டைத் துள்ளி வந்திடும் போது ஐயப்பா நீ ஆட்டமாடி வந்திடுவாய் ஐயப்பா (காடுமலை) நீலவிழி கண்ணனுக்கும் நீரணிந்த‌ ஈசனுக்கும் …

Ayyappanai Kaana Vaarungal – ஐயப்பன் பஜனை பாடல்கள்

ஐயப்பனை காண‌ வாருங்கள் அவன் நாமத்தை எல்லோரும் பாடுங்கள் தயவும் கருணையும் கொண்டவன் ஐயப்பன் அபயம் தந்திடும் ஆண்டவன் ஐயப்பன் (ஐயப்பனை) ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி சந்ததமும் அவன் ஸ‌ந்நிதியைத் தொழ‌ ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி சந்ததமும் அவன் ஸ‌ந்நிதியைத் தொழ‌ பதினெட்டாம் படி கடந்து அவன்பாத‌ மலரணையை தொழுதிடவே நீங்கள் (ஐயப்பனை) பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திடும் சரனம் பொன்னையப்பா பம்பை வெள்ளமெனக் கருணை வழிந்தோடும் சரணம் பொன்னையப்பா அன்பு …