Tag «தாயுமானவர் பாடல்கள்»

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: குமரமரபின் வணக்கம்

குமரமரபின் வணக்கம் துய்ய கரமலரால் சொல்லாமல் சொன்னவுண்மைஐயனைக்கல் லால்அரசை யாமணைவ தெந்நாளோ. 1. சிந்தையினுக் கெட்டாத சிற்சுகத்தைக் காட்டவல்லநந்தியடிக் கீழ்க்குடியாய் நாமணைவ தெந்நாளோ. 2. எந்தை சனற்குமர னாதிஎமை ஆட்கொள்வான்வந்த தவத்தினரை வாழ்த்துநாள் எந்நாளோ. 3. பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவிதமெய்கண்ட நாதன்அருள் மேவுநாள் எந்நாளோ. 4. பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்த மாகவுண்மைசாதித்தார் பொன்னடியைத் தான்பணிவ தெந்நாளோ. 5. சிற்றம் பலமன்னுஞ் சின்மயராந் தில்லைநகர்க்கொற்றங் குடிமுதலைக் கூறுநாள் எந்நாளோ. 6. குறைவிலருள் ஞானமுதல் கொற்றங் குடியடிகள்நறைமலர்த்தாட் கன்புபெற்று …

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி – தெய்வ வணக்கம்

எந்நாள்கண்ணி தெய்வ வணக்கம் நீர்பூத்த வேணி நிலவெறிப்ப மனறாடுங்கார்பூத்த கண்டனையான் காணுநாள் எந்நாளோ. 1. பொன்னாரும் மன்றுள்மணிப் பூவைவிழி வண்டுசுற்றும்என்னா ரமுதின்நலன் இச்சிப்ப தெந்நாளோ. 2. நீக்கிமலக் கட்டறுத்து நேரே வெளியிலெம்மைத்தூக்கிவைக்குந் தாளைத் தொழுதிடிநாள் எந்நாளோ. 3. கருமுகங்காட் டாமல்என்றுங் கர்ப்பூரம் வீசுந்திருமுகமே நோக்கித் திருக்கறுப்ப தெந்நாளோ. 4. வெஞ்சே லெனும்விழியார் வேட்கைநஞ்சுக் கஞ்சினரைஅஞ்சேல் எனுங்கைக் கபயமென்ப தெந்நாளோ. 5. ஆறு சமயத்தும் அதுவதுவாய் நின்றிலங்கும்வீறு பரைதிருத்தாள் மேவுநாள் எந்நாளோ. 6. பச்சைநிற மாய்ச்சிவந்த பாகங் கலந்துவகைஇச்சையுடன் …

Thayumanavar Songs – பைங்கிளிக்கண்ணி

பைங்கிளிக்கண்ணி அந்தமுடன் ஆதி அளவாமல் என்னறிவில்சுந்தரவான் சோதி துலங்குமோ பைங்கிளியே. 1. அகமேவும் அண்ணலுக்கென் அல்லலெல்லாஞ் சொல்லிச்சுகமான நீபோய்ச் சுகங்கொடுவா பைங்கிளியே. 2. ஆவிக்குள் ஆவிஎனும் அற்புதனார் சிற்சுகந்தான்பாவிக்குங் கிட்டுமோ சொல்லாய்நீ பைங்கிளியே. 3. ஆருமறி யாமல்எனை அந்தரங்க மாகவந்துசேரும்படி இறைக்குச் செப்பிவா பைங்கிளியே. 4. ஆறான கண்ணீர்க்கென் அங்கபங்க மானதையுங்கூறாத தென்னோ குதலைமொழிப் பைங்கிளியே. 5. இன்பருள ஆடையழுக் கேறும்எமக் கண்ணல்சுத்தஅம்பரமாம் ஆடை அளிப்பானோ பைங்கிளியே. 6. உன்னாமல் ஒன்றிரண்டென் றோராமல் வீட்டுநெறிசொன்னான் வரவும்வகை சொல்லாய்நீ …

Thayumanavar Songs – பெற்றவட்கே

பெற்றவட்கே பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளைபெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம்உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும்உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார். 1. ஆவாவென் றழுதுதொழுங் கைய ராகிஅப்பனே ஆனந்த அடிக ளேநீவாவாவென் றவர்க்கருளுங் கருணை எந்தாய்வன்னெஞ்சர்க் கிரங்குவதெவ் வாறு நீயே. 2. நீயேஇங் கெளியேற்குந் தாக மோகநினைவூடே நின்றுணர்த்தி நிகழ்த்த லாலேபேயேற்குந் தனக்கெனவோர் அன்பு முண்டோபெம்மானே இன்னமன்பு பெருகப் பாராய். 3. பாராயோ என்துயரம் எல்லாம் ஐயாபகருமுன்னே தெரியாதோ பாவி யேன்முன்வாராயோ இன்னமொரு காலா னாலும்மலர்க்காலென் சென்னிமிசை வைத்தி …

Thayumanavar Songs – தந்தைதாய்

தந்தைதாய் தந்தைதாய் மகவுமனை வாழ்க்கை யாக்கைசகமனைத்தும் மவுனியருள் தழைத்த போதேஇந்திரசா லங்கனவு கானல் நீராயஇருந்ததுவே இவ்வியற்கை என்னே என்னே. 1. என்னைநான் கொடுக்கஒருப் பட்ட காலம்யாதிருந்தென் எதுபோய்என் என்னை நீங்காஅன்னைபோல் அருள்பொழியுங் கருணை வாரிஆனந்தப் பெருமுகிலே அரசே சொல்லாய். 2. அரசேநின் திருக்கருணை அல்லா தொன்றைஅறியாத சிறியேன்நான் அதனால் முத்திக்கரைசேரும் படிக்குனருட் புணையைக் கூட்டுங்கைப்பிடியே கடைப்பிடியாக் கருத்துட் கண்டேன். 3. கண்டேனிங் கென்னையும்என் றனையும் நீங்காக்கருணையும்நின் றன்னையும்நான் கண்டேன் கண்டேன்விண்டேன்என் றெனைப்புறம்பாத் தள்ள வேண்டாம்விண்டதுநின் அருட்களிப்பின் வியப்பா …

Thayumanavar Songs – பெரியநாயகி

பெரியநாயகி காற்றைப் பிடித்துமட் கரகத் தடைத்தபடிகன்மப் புனற்குளூறுங்கடைகெட்ட நவவாயில் பெற்றபசு மட்கலக்காயத்துள் எனையிருத்திச் சோற்றைச் சுமத்திநீ பந்தித்து வைக்கத்துருத்திக்குள் மதுஎன்னவேதுள்ளித் துடித்தென்ன பேறுபெற் றேன்அருள்தோயநீ பாய்ச்சல்செய்து நாற்றைப் பதித்ததென ஞானமாம் பயிரதனைநாட்டிப் புலப்பட்டியும்நமனான தீப்பூடும் அணுகாமல் முன்னின்றுநாடுசிவ போகமான பேற்றைப் பகுத்தருளி எனையாள வல்லையோபெரியஅகி லாண்டகோடிபெற்றநா யகிபெரிய கபிலைமா நகர்மருவுபெரியநா யகியம்மையே. 1.

Thayumanavar Songs – அகிலாண்ட நாயகி

அகிலாண்ட நாயகி வட்ட மிட்டொளிர்பி ராண வாயுவெனுநிகள மோடுகம னஞ்செயும்மனமெ னும்பெரிய மத்த யானையைஎன்வசம டக்கிடின் மும் மண்டலத் திட்ட முற்றவள ராச யோகமிவன்யோக மென்றறிஞர் புகழவேஏழை யேனுலகில் நீடு வாழ்வன்இனிஇங்கி தற்கும்அனு மானமோ பட்ட வர்த்தனர் பராவு சக்ரதரபாக்ய மானசுப யோகமும்பார காவிய கவித்வ நான்மறைபராய ணஞ்செய்மதி யூகமும் அட்ட சித்தியுந லன்ப ருக்கருளவிருது கட்டியபொன் அன்னமேஅண்ட கோடிபுகழ் காவை வாழும்அகிலாண்ட நாயகியென் அம்மையே. 1.

Thayumanavar Songs – மலைவளர்காதலி

மலைவளர்காதலி பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள்பக்கமுண் டெக்காலமும்பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாகயமபடரெனுந் திமிர மணுகாக் கதியுண்டு ஞானமாங் கதிருண்டு சதிருண்டுகாயசித் திகளுமுண்டுகறையுண்ட கண்டர்பால் அம்மைநின் தாளில்கருத்தொன்றும் உண்டாகுமேல் நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டபரஞானஆ னந்தஒளியேநாதாந்த ரூபமே வேதாந்த மோனமேநானெனும் அகந்தைதீர்த்தென் மதியுண்ட மதியான மதிவதன வல்லியேமதுசூ தனன்தங்கையேவரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலைவளர்காத லிப்பெண்உமையே. 1. தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலேசிற்றிடையி லேநடையிலேசேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலேசிறுபிறை நுதற்கீற்றிலே பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனைகந்தபொடியிலே அடியிலேமேல்பூரித்த முலையிலே நிற்கின்ற …

Thayumanavar Songs – கற்புறுசிந்தை

கற்புறுசிந்தை கற்புறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறோர்இற்புறத் தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வுந்தற்பொறி யாக நல்குந் தலைவநின் னலதோர் தெய்வம்பொற்புறக் கருதோங் கண்டாய் பூரணா னந்த வாழ்வே. 1. முருந்திள நகையார் பார முலைமுகந் தழுவிச் செவ்வாய்விருந்தமிர் தெனவ ருந்தி வெறியாட்டுக் காளாய் நாளும்இருந்தலோ காய தப்பேர் இனத்தனாய் இருந்த ஏழைபொருந்தவுங் கதிமே லுண்டோ பூரணா னந்த வாழ்வே. 2. தீதெலாம் ஒன்றாம் வன்மை செறிந்திருட் படலம்போர்த்தபாதகச் சிந்தை பெற்ற பதகனுன் பாத நீழல்ஆதர …