Tag «தாயுமானவர் பாடல்கள்»

Thayumanavar Songs – பாயப்புலி

பாயப்புலி பாயப் புலிமுனம் மான்கன்றைக் காட்டும் படிஅகிலமாயைப் பெரும்படைக்கேஇலக் காவெனை வைத்தனையோநீயெப் படிவகுத் தாலுநன் றேநின் பெருங்கருணைதாயொத் தடியர்க் கருள்சச்சி தானந்த தற்பரமே. 1. தற்பர மாஞ்சிற் பரமாகி மன்றந் தனில்நடித்துநிற்பர்அம் போருகன் மால்பணி நீதரென் நெஞ்சகமாங்கற்பரந் தாங்குக் கரைந்திட வானொத்த காட்சிநல்கும்பொற்பர மாயென் வினைக்கருந் தாதைப் பொடிசெய்ததே. 2. செய்யுந் தவஞ்சற்று மில்லாத நான்உன் திருவடிக்கேகொய்யும் புதுமல ரிட்டுமெய் யன்பர் குழாத்துடனேகையுஞ் சிரமிசைக் கூப்பிநின் றாடிக் கசிந்துருகிஉய்யும் படிக்கருள் செய்வதென் றோபுலி யூரத்தனே. 3. அத்தனைச் …

Thayumanavar Songs – மண்டலத்தின்

மண்டலத்தின் மண்டலத்தின் மிசையொருவன் செய்வித்தைஅகோவெனவும் வார ணாதிஅண்டமவை அடுக்கடுக்காய் அந்தரத்தில்நிறுத்துமவ தானம் போலஎண்தரும்நல் அகிலாண்ட கோடியைத்தன்அருள்வெளியில் இலக வைத்துக்கொண்டுநின்ற அற்புதத்தை எவராலும்நிச்சயிக்கக் கூடா ஒன்றை. 1. ஒன்றிரண்டாய் விவகரிக்கும் விவகாரங்கடந்தேழாம் யோக பூமிநின்றுதெளிந் தவர்பேசா மௌன நியாயத்தைநிறை நிறைவைத் தன்னைஅன்றியொரு பொருளிலதாய் எப்பொருட்கும்தான்முதலாய் அசல மாகிஎன்றுமுள்ள இன்பத்தைத் தண்ணென்றசாந்தபத இயற்கை தன்னை. 2. பதமூன்றுங் கடந்தவர்க்கு மேலானஞானபதப் பரிசு காட்டிச்சதமாகி நிராலம்ப சாட்சியதாய்ஆரம்பத் தன்மை யாகிவிதம்யாவுங் கடந்தவித்தை யெனுமிருளைக்கீண்டெழுந்து விமல மாகிமதமாறுங் காணாத ஆனந்தசாகரத்தை மௌன வாழ்வை. …

Thayumanavar Songs – எனக்கெனச் செயல்

எனக்கெனச் செயல் எனக்கெ னச்செயல் வேறிலை யாவுமிங் கொருநின்தனக்கெ னத்தகும் உடல்பொரு ளாவியுந் தந்தேன்மனத்த சத்துள அழுக்கெலாம் மாற்றியெம் பிரான்நீநினைத்த தெப்படி யப்படி அருளுதல் நீதம். 1. உளவ றிந்தெலாம் நின்செய லாமென வுணர்ந்தோர்க்களவி லானந்தம் அளித்தனை அறிவிலாப் புன்மைக்களவு நாயினேற் கிவ்வணம் அமைத்தனை கருத்துத்தளருந் தன்மையிங் காரொடு புகலுவேன் தக்கோய். 2. என்னைத் தான்இன்ன வண்ணமென் றறிகிலா ஏழைதன்னைத் தான்அறிந் திடஅருள் புரிதியேல் தக்கோய்பின்னைத் தானின்றன் அருள்பெற்ற மாதவப் பெரியோர்நின்னைத் தான்நிக ரார்என வாழ்த்துவர் நெறியால். …

Thayumanavar Songs – ஆசையெனும்

ஆசையெனும் ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ்செனவும்மன தலையுங் காலம்மோசம் வரும் இதனாலே கற்றதுங்கேட்டதுந்தூர்ந்து முத்திக் கானநேசமும்நல் வாசமும்போய்ப் புலனாயிற்கொடுமைபற்றி நிற்பர் அந்தோதேசுபழுத் தருள்பழுத்த பராபரமேநிராசையின்றேல் தெய்வமுண்டோ. 1. இரப்பானங் கொருவனவன் வேண்டுவகேட்டருள்செயென ஏசற் றேதான்புரப்பான்றன் அருள்நாடி இருப்பதுபோல்எங்குநிறை பொருளே கேளாய்மரப்பான்மை நெஞ்சினன்யான் வேண்டுவகேட்டிரங்கெனவே மௌனத் தோடந்தரப்பான்மை அருள்நிறைவில் இருப்பதுவோபராபரமே சகச நிட்டை. 2. சாட்டையிற் பம்பர சாலம் போல்எலாம்ஆட்டுவான் இறையென அறிந்து நெஞ்சமேதேட்டமொன் றறஅருட் செயலில் நிற்றியேல்விட்டறந் துறவறம் இரண்டும் மேன்மையே. 3. தன்னெஞ்ச நினைப்பொழியா தறிவிலிநான்ஞானமெனுந் தன்மை …

Thayumanavar Songs – தன்னையொருவர்

23. தன்னையொருவர் தன்னை யொருவர்க் கறிவரிதாய்த்தானே தானாய் எங்குநிறைந்துன்னற்கரிய பரவெளியாய்உலவா அமுதாய் ஒளிவிளக்காய்என்னுட் கலந்தாய் யானறியாதிருந்தாய் இறைவா இனியேனும்நின்னைப் பெருமா றெனக்கருளாம்நிலையைக் கொடுக்க நினையாயோ. 1. நினையு நினைவுக் கெட்டாதநெறிபெற் றுணர்ந்த நெறியாளர்வினையைக் கரைக்கும் பரமஇன்பவெள்ளப் பெருக்கே நினதருளால்மனைவி புதல்வர் அன்னைபிதாமாடு வீடென் றிடுமயக்கந்தனையும் மறந்திங் குனைமறவாத்தன்மை வருமோ தமியேற்கே. 2. வரும்போம் என்னும் இருநிலைமைமன்னா தொருதன் மைத்தாகிக்கரும்போ தேனோ முக்கனியோஎன்ன என்னுள் கலந்துநலந்தரும்பே ரின்பப் பொருளேநின்தன்னை நினைந்து நெக்குருகேன்இரும்போ கல்லோ மரமோஎன்இதயம் யாதென் றறியேனே. 3. …

Thayumanavar Songs Lyrics List in Tamil

Thayumanavar Songs Lyrics List in Tamil Thayumanavar Songs – திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் Thayumanavar Songs – பரிபூரணானந்தம் Thayumanavar Songs – பொருள் வணக்கம் Thayumanvar Songs – சின்மயானந்தகுரு Thayumanavar Songs – மௌனகுரு வணக்கம் Thayumanavar Songs – கருணாகரக்கடவுள் Thayumanavar Songs – சித்தர்கணம் Thayumanavar Songs – ஆனந்தமானரம் Thayumanavar Songs – சுகவாரி Thayumanavar Songs – எங்கு நிறைகின்ற பொருள் Thayumanavar Songs …

Thayumanavar Songs – சிவன்செயல்

22. சிவன்செயல் சிவன்செய லாலே யாதும் வருமெனத் தெறேன் நாளும் அவந்தரு நினைவை யெல்லாம் அகற்றிலேன் ஆசை வெள்ளங் கவர்ந்துகொண் டிழுப்ப அந்தக் கட்டிலே அகப்பட் டையோ பவந்தனை ஈட்டி ஈட்டிப் பதைக்கின்றேன் பாவி யேனே. 1. பாவியேன் இனியென் செய்கேன் பரமனே பணிந்துன் பாதஞ் சேவியேன் விழிநீர் மல்கச் சிவசிவ என்று தேம்பி ஆவியே நிறைய வந்த அமுதமே என்னேன் அந்தோ சாவிபோஞ் சமயத் தாழ்ந்து சகத்திடைத் தவிக்கின் றேனே. 2. இடைந்திடைந் தேங்கி மெய்புள …

Thayumanavar Songs – வம்பனேன்

21. வம்பனேன் வம்பனேன் கள்ளங் கண்டு மன்னருள் வெள்ள ராய உம்பர்பால் ஏவல் செய்யென் றுணர்த்தினை ஓகோ வானோர் தம்பிரா னேநீ செய்த தயவுக்குங் கைம்மா றுண்டோ எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனியொன்றுங் குறைவிலேனே. 1. குறைவிலா நிறைவாய் ஞானக் கோதிலா னந்த வெள்ளத் துறையிலே படிந்து மூழ்கித் துளைந்துநான் தோன்றா வாறுள் உறையிலே யுணர்த்தி மோன வொண்சுடர் வைவாள் தந்த இறைவனே யுனைப்பி ரிந்திங் கிருக்கிலேன் இருக்கி லேனே. 2. இருநில மாதி நாதம் ஈறதாம் …

Thayumanavar Songs – சொல்லற்குஅரிய

20. சொல்லற்குஅரிய சொல்லற் கரிய பரம்பொருளே சுகவா ரிதியே சுடர்க்கொழுந்தே வெல்லற் கரிய மயலிலெனை விட்டெங் கொளித்தாய் ஆகெட்டேன் கல்லிற் பசிய நாருரித்துக் கடுகிற் பெரிய கடலடைக்கும் அல்லிற் கரிய அந்தகனார்க் காளாக் கினையோ அறியேனே. 1. அறிவிற் கறிவு தாரகமென் றறிந்தே, அறிவோ டறியாமை நெறியிற் புகுதா தோர்படித்தாய் நின்ற நிலையுந் தெரியாது குறியற் றகண்டா தீதமயக் கோதி லமுதே நினைக்குறுகிப் பிரிவற் றிறுக்க வேண்டாவோ பேயேற் கினிநீ பேசாயே. 2. பேசா அநுபூ தியை …