Tag «மகாபாரதம் கதை pdf»

Mahabharatham story in Tamil 46 – மகாபாரதம் கதை பகுதி 46

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி – 46 பரமசிவன் சிரித்தார். தேவீ ! உன் கருணைக்கு தான் ஏது எல்லை. பக்தர்கள் துன்பப்படுவதை நீ சகிக்க மாட்டாய். அவர்கள் எந்தத் துன்பத்தையும் தாங்கும் சக்தியைப் பெற வேண்டும் என்ற பக்குவ நிலையை அடைய வேண்டும் என நான் விரும்புகிறேன். அர்ஜுனனை நான் கவனிக்காமல் இல்லை ! அவன் அக்னியின் மத்தியில் நின்று செய்யும் கொடிய தவம் என்னை ஈர்க்கத்தான் செய்திருக்கிறது. கவலை கொள்ளாதே. …

Mahabharatham story in Tamil 45 – மகாபாரதம் கதை பகுதி 45

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 45 தங்களையும், தங்கள் மனைவியையும் இக்கட்டில் இருந்து விடுவிப்பதே தர்மரின் நோக்கம். அதன் காரணாகவே சூதுக்கு அவர் சம்மதித்தார். சுதந்திரமான சூழ்நிலையில் அவர்கள், காட்டுக்குப் புறப்பட்டனர். தன் குருமார்களான துரோணர், கிருபாச்சாரியார் மற்றும் அஸ்வத்தாமனிடம் தர்மர் ஆசி பெற்றார். மக்கள் மனமுருகி அழுதனர். அவர்கள் காட்டுக்குச் சென்றபோது அவருடன் தவுமிய முனிவர் என்பவரும் சென்றார். அவர்கள் காட்டுக்குள் நுழையவும், 12 ஆயிரம் முனிவர்கள் அங்கிருந்தனர். மகரிஷி தவுமியருடன் …

Mahabharatham story in Tamil 44 – மகாபாரதம் கதை பகுதி 44

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 44 ஏ துச்சாதனா ! அந்த அடிமை பேசிக்கொண்டிருக்கிறாள், நீ பார்த்து கொண்டிருக்கிறாயா ? அவளது புடவை வளர்ந்தால் என்ன ? நீ அவளை இழுத்து வந்து என் தொடையில் அமர வை, அப்போது பார்ப்போம் என்ன செய்கிறாள் என்று? இப்படி, தனது அண்ணியாரையே தகாத செயலுக்கு உட்படுத்த முயற்சித்ததைக் கண்டு கொதித்த பாஞ்சாலி, என்னை தகாத வார்த்தை சொன்ன இந்த துரியோதனின் தலை போரில் உருளும். …

Mahabharatham story in Tamil 43 – மகாபாரதம் கதை பகுதி 43

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி – 43 சபை நடுவே இழுத்துச் செல்லப்பட்டாள் திரவுபதி. கர்ணனும், துரியோதனனும், சகுனியும் கை கொட்டி சிரித்தனர். அந்த சபையில் பீஷ்மர் மற்றும் பலநாட்டு அரசர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள், இந்தக் காட்சியை கண்டு தலை குனிந்தனர். திரவுபதியின் கதறல் ஒலி சபையையே குலுக்கியது, இது காதில் விழுந்தும் கண்கெட்ட திருதராஷ்டிரன் மனமும் கெட்டு ஏதும் பேசாமல் இருந்தான். திரவுபதியின் கூந்தல் துச்சாதனன் இழுத்து வந்ததில் அவிழ்ந்து தாறுமாறாகக் …

Mahabharatham story in Tamil 42 – மகாபாரதம் கதை பகுதி 42

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி-42 தனக்கு கிருஷ்ணர் தந்த தேரை பந்தய பொருளாக வைத்தார் தர்மர். தோற்றுப் போனார். இப்படியே தன் சதுரங்க சேனை, தன் தேசம், அரசாளும் உரிமை, ஒட்டுமொத்த இந்திரபிரஸ்தம் என எல்லாவற்றையும் தோற்று விட்டார். ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை எந்தளவுக்கு இருக்க வேண்டுமென ஒரு கேள்வி கேட்டால், அது ஒரு சூதாட்டக்காரனின் மனதில் இருக்குமளவுக்கு வேண்டும் என அழகாக பதில் சொல்வார்கள் சிலர். அதே நிலையில் தான் தர்மர் …

Mahabharatham story in Tamil 41 – மகாபாரதம் கதை பகுதி 41

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி-41 ஸ்திரிகளே! ஒருவருக்கு வாக்களித்த பின் அதைச்செய்யாமல் இருப்பது தர்மமல்ல! என்ற தர்மர், விதியின் வழியில் தன்னைச் செலுத்தினார். கஷ்டம் வரும் என்றே தெரிந்தும், அதில் போய் சிக்கிக் கொள்ளலமா என தர்மரைப் பற்றி எல்லாரும் எண்ணக்கூடும். ராமாயணமும், மகாபாரதமும் தர்மத்தை உரைப்பவை. ராமனை காட்டுக்கு அனுப்புவது உசிதமல்ல என்பது தெரிந்திருந்தும், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற தர்மத்தின் கட்டளைக்கு தசரதர் கீழ்ப்படிந்தது போல, இங்கே தர்மன் …

Mahabharatham story in Tamil 40 – மகாபாரதம் கதை பகுதி 40

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி-40 துரியோதனனின் காதில், மருமகனே! நீ, இந்த உலகிலேயே மிகப்பெரிய சபாமண்டபம் ஒன்றை நம் அரண்மனையின் அருகில் எழுப்பு. அது தேவலோகத்திலுள்ள மண்டபத்தையும் தோற்கடிக்கும் அழகைக் கொண்டிருக்க வேண்டும். அதைப் பார்க்க வரும்படி பாண்டவர்களுக்கு தூது அனுப்பு. அதைக் காண தர்மன் தன் குடும்பத்துடன் வருவான். வந்த இடத்தில், பொழுதுபோக்குக்காக சூதாடுவோமே என நான் சொல்வேன். அவன் மறுத்தாலும் கூட, நம் வார்த்தை ஜாலத்தால், அவனை சூதாட வைப்போம். …

Mahabharatham story in Tamil 39 – மகாபாரதம் கதை பகுதி 39

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி-39 அவர் சிசுபாலனிடம், சிசுபாலா, நாம் இருப்பது வேறொருவரின் நாட்டில்! இல்லாவிட்டால், உன் சிரத்தை இப்போதே அறுத்திருப்பேன். நாம் இருவருமே நகரின் வெளியே செல்வோம். அங்கு போர் செய்வோம். உனக்கு இன்றுதான் இறுதிநாள், என்றார். சிசுபாலன் சற்றும் மனம் கலங்காமல், போருக்கு புறப்பட்டான். கடும் போர் நடந்தது. சற்றும் சளைக்காமல் சண்டையிட்டான் சிசுபாலன். தகுந்த நேரத்தில், தன் சக்ராயுதத்தால் சிசுபாலனின் தலையை அறுத்தார் கிருஷ்ணன். உடனே, சிசுபாலனின் உயிர் …

Mahabharatham story in Tamil 38 – மகாபாரதம் கதை பகுதி 38

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி-38 போர் தொடர்ந்தது. ஜராசந்தன் புதுவலிமை பெற்று பீமனுடன் யுத்தம் செய்தான். அர்ஜூனன் ஆச்சரியத்துடன், கண்ணா! இதெப்படி சாத்தியம். அண்ணா பீமன், ஜராசந்தனை இரண்டாக கிழித்தபிறகும், அவனது உடல் ஒட்டிக்கொண்ட ரகசியம் என்ன? என்றான். கிருஷ்ணர் புன்சிரிப்புடன், அது ஒரு பெரியகதை என்று ஆரம்பித்தார். பிருகத்ரதன் என்ற அசுரன் தேவர்களுக்கு பரம எதிரி. இவனுக்கு இரண்டு மனைவிகள். காசிராஜனின் புத்திரிகள். ஆனால், புத்திர பாக்கியம் இல்லை. அவன் கவுசிகமுனிவரை …