Kandhar Anthathi in Tamil
காப்பு வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்து வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவச வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே. உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர் உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள் உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில் உண்ணா முலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே. 1. திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய் திருவாவி னன்குடி யேரகங் …