Kanthar Anubhuthi in Tamil
காப்பு விபூதி தியானம் நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத் தஞ்சத்தருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொற்புனை மாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம். நூல் 1. மதயானையை வெல்ல ஆடும் பரிவேல் அணி சேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனியானை சகோதரனே. 2. வணங்காரை தண்டிக்க உல்லாச நிராகுலயோ கவிதச் சல்லாப விநோதனும் நீ அலையோ எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே. …