Tag «mahabharatham tamil»

Mahabharatham story in Tamil 106 – மகாபாரதம் கதை பகுதி 106

மகாபாரதம் பகுதி-106 ​ இதனிடையே உயிருக்குப் பயந்து ஓடிய அஸ்வத்தாமனை அர்ஜுனன் பின் தொடர்ந்தான். அவனிடமிருந்து தப்பிக்க கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஒரு யோசனை சொன்னார். அர்ஜுனா! அந்த அஸ்திரம் உன்னை அழித்து விடும். பதிலுக்கு, நீயும் உன்னிடமுள்ள பிரம்மா ஸ்திரத்தை விடு, என்றார். அப்போது வேதவியாசர் அங்கு வந்தார். கிருஷ்ணனிடம், கிருஷ்ணா! என்ன இது விளையாட்டு! இரண்டு பிரம்மாஸ்திரங்கள் மோதினால் உலகமே அழிந்து விடும் என்பது உனக்குத் தெரியாதா! காக்கும் கடவுளே! நீயே இப்படி செய்யலாமா? என்றார். …

Mahabharatham story in Tamil 105 – மகாபாரதம் கதை பகுதி 105

மகாபாரதம் பகுதி-105 ​ கிருஷ்ணரால் பாண்டவர் பாசறையை பாதுகாக்க ஒரு பூதம் நியமிக்கப்பட்டிருந்தது. அந்தப் பூதம் தன் முன் வந்தவர்களை பாசறைக்குள் நுழையமுடியாதபடி தடுத்து விரட்டி விட்டது. ஒரு மரத்தடியில் தங்கிய அவர்கள், அதை மீறி பாசறைக்குள் எப்படி நுழைவதென ஆலோசித்தனர். அஸ்வத்தாமன் அவர்களிடம், துரியோதனனிடம் எப்படியாவது பாண்டவர்களை அழித்து விட்டே திரும்புவோமென சபதம் செய்து விட்டு வந்துள்ளோம். அவனும் நமக்காக ஆவலுடன் காத்திருப்பான். இந்தப் பூதத்தைக் கண்டு பயப்படுவதை விட, அதை அடக்கிவிட்டு உள்ளே நுழைய …

Mahabharatham story in Tamil 104 – மகாபாரதம் கதை பகுதி 104

மகாபாரதம் பகுதி-104 ​ துரியோதனா! இந்தப் போர் தேவையில்லை. இந்த தேசத்தை நான் ஆண்டால் என்ன! அல்லது நீ ஆண்டால் என்ன! உன் தலைமையிலேயே ஆட்சி நடக்கட்டும். உனக்கு ஏவல் செய்யும் காவலர்களாக நாங்கள் ஐவரும் விளங்குகிறோம். இந்தச் சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்று எதிர்கால உலகம் பாராட்டட்டும். நீயே இந்த ஆட்சியை எடுத்துக் கொள்கிறாயா? என்று பெருந்தன்மையுடன் கேட்டார். தர்மர் என்று இவருக்கு பெயர் வந்ததன் காரணமே இதுதான். எவ்வளவு நல்ல குணம்! இவர்கள் ஐவரும் …

Mahabharatham story in Tamil 103 – மகாபாரதம் கதை பகுதி 103

மகாபாரதம் பகுதி-103 ​ சகுனி இம்முறை பெரும் போராட்டத்தில் இறங்கினான். பீமனுக்கும் சகுனியைச் சுற்றி நின்ற படைகளுக்கும் இடையே யுத்தம் நடந்தது. பீமன் வழக்கம் போல் அவர்களைக் கொன்று குவித்தான். துரியோதனனுக்கு பயம் அதிகரித்தது. ஆனால், சகுனி சற்றும் தைரியம் குறையாமல், மருமகனே! கவலை கொள்ளாதே. ஒட்டுமொத்த சேனையையும் இங்கே திருப்பு. நாம் பீமனைக் கொன்று விடலாம், என்று கொக்கரித்தான். அப்போது சகாதேவன் வேகமாக வந்து, சகுனியின் மீது அம்பொன்றை எய்தான். ஆனால், துரியோதனன் சகாதேவன் மீது …

Mahabharatham story in Tamil 101– மகாபாரதம் கதை பகுதி 101

மகாபாரதம் பகுதி-101 ​ பின்னர், அர்ஜுனனிடம், பார்த்தா! இதுதான் சரியான சமயம். சூரியன் மறைய இன்னும் சிறிது நேரமே இருக்கிறது. உம்… கர்ணன் மீது அம்பை விடு, என்றார். அவன் தனது சகோதரன் என்பதை அதுவரை அறியாத அர்ஜுனனும், தன் எதிரி வீழப்போகிறான் என்ற மகிழ்ச்சியுடன் அஞ்சரீகம் என்ற அம்பை எய்தான். அது அர்ஜுனனின் மார்பில் பாய்ந்தது. தனக்கு துன்பம் செய்தவர்களுக்கு முனிவர் ஒருவர் விடும் சாபம் எப்படி உடனே பலிக்குமோ, அதுபோல் கர்ணன் மீது அர்ஜுனன் …

Mahabharatham story in Tamil 102 – மகாபாரதம் கதை பகுதி 102

மகாபாரதம் பகுதி-102 ​ ஒருவர் பிறருக்குத் துன்பம் செய்ய நினைக்கும்போது, அது தன்னையே தாக்கும் என்பதை உணர வேண்டும். அந்த நிலைமையில் தான் அர்ஜுனன் இருந்தான். இப்போது அனைத்து சகோதரர்களின் பார்வையும் கண்ணபிரான் மீது திரும்பின. அவர்கள் அவரைத் திட்டித் தீர்த்தனர். நகுலன் கிருஷ்ணரிடம், ஏ கண்ணா! கம்சனால் அனுப்பப்பட்ட பூதகி யிடம் பால் குடிப்பது போல் நாடகமாகி, அவளது உயிரைக் குடித்த பைத்தியக்காரன் தானே நீ! எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இப்படி செய்திருப்போமா! என்றான். …

Mahabharatham story in Tamil 100 – மகாபாரதம் கதை பகுதி 100

மகாபாரதம் பகுதி-100 ​ பரசுராமர் அந்தணர்களுக்கு மட்டுமே வில்வித்தை கற்று கொடுத்து வந்தார். கர்ணனும், வில்லார்வம் காரணமாக அந்தணனைப் போல் வேடமிட்டு பரசுராமரிடம் வித்தை கற்றான். ஒருமுறை, பரசுராமர் அவனது மடியில் தலை வைத்து படுத்திருந்த போது, வண்டு ஒன்று கர்ணனின் தொடையைத் துளைத்தது. குருவின் துõக்கம் கலைந்து விடக்கூடாது என்பதால், கர்ணன் அந்த வலியையும் தாங்கவே ரத்தம் பெருக்கெடுத்து பரசுராமரின் கையில் பட அவர் விழித்து விட்டார். ஒரு க்ஷத்திரியனால் மட்டுமே இதுபோன்ற வலியைத் தாங்க …