Tag «margazhi matham sirappu in tamil language»

Perumaikal Vanthu Seera Pillayarai

பெருமைகள் வந்து சேரப் பிள்ளையாரை விரதம் இருந்து வழிபடுவோம் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன் ‘மூல முதற்கடவுள்’ என்றும், ‘ஆனைமுகன்’ என்றும் போற்றப்படும், விநாயகரை வழிபட்டுத் தொடங்குவது தான் மரபு. வெற்றிகளை வரவழைத்துக் கொடுக்கக் கூடியவர். மஞ்சளிலே பிடித்தாலும், சாணத்தில் பிடித்தாலும், இருக்கும் இடத்திலேயே எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆற்றல் மிகுதெய்வம் விநாயகர். தடைகளை அகற்றி தக்க நேரத்தில் செயல்களை முடித்துக் கொடுப்பவரும் அவரே. ஒருவருடைய வாழ்வில் பெருமைகள் வந்து சேர வேண்டுமானால் பிள்ளையாரை வழிபடவேண்டும். விநாயகப் …

Ravananukku Shivaperuman

ராவணனுக்கு சிவபெருமான் அளித்த சந்திரஹாஷம் ராவணனுக்கு சிவபெருமானால் பரிசளிக்கப்பட்ட பிறை வடிவ வாளின் பெயர் தான் ‘சந்திரஹாஷம்’. ஒருமுறை ராவணன் தனது புஷ்பக விமானத்தில் பறந்து சென்றுகொண்டிருந்தான். அவன் சென்ற வழியில் தான் சிவபெருமான் வசிப்பிடமான கயிலாய மலை இருந்தது. தன் பாதையில் குறுக்கிட்ட மலையை, தன் பலத்தால் தூக்க முற்பட்டான், ராவணன். ஆனால் சிவபெருமான் தன்னுடைய பெருவிரலால் அந்த மலையை அழுத்த, மலையின் அடியில் சிக்கிக்கொண்டான் ராவணன். அதில் இருந்து அவனால் விடுபடமுடியவில்லை ஆயிரம் ஆண்டுகள் …

Umaikku Idapagam Kodutha Eesan

உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன் திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள்.  ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார்.  அய்யனே நீங்கள் எப்போதும் …

Margali Nombu

மார்கழி நோன்பு தனுர் மாதம்’ என்றழைக்கப்படும் மார்கழி, மிகவும் புண்ணியமான மாதமாகவும், தமிழ் மாதங்களிலேயே சிறப்பான மாதமாகும். மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். இந்த ஒருநாளின் வைகறைப் பொழுதாக பிரம்ம முகூர்த்தத்தில் உருவாவதனால் மார்கழி விசேஷமான மாதமாக போற்றப்படுகிறது.  பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த ஆண்டாள், பெருமாள் மீது கொண்ட அதீத பக்தியாழ், அவரையே தன் கணவனாக அடைய விரும்பினாள். கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் இருந்த ஆண்டாளுக்கு …