Vinnukkum Mannukkum Naduvirundhu
மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் கந்தனே நீ ஒரு கற்கண்டு! (2) குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ குளிர்வீசி வரும்தென்றல் இசைநீயன்றோ மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ (2) என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ (மண்ணுக்கும் விண்ணுக்கும்) பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ (2) தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும் பொருள் நீயன்றோ (மண்ணுக்கும் …