Nakshatra Song for Birth Star Ashwini
அசுவினி : தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன் எக்கால் எப்பயன் நின் திறம் அல்லால் எனக்கு உளதே மிக்கார் தில்லையுள் விருப்பா மிக வடமேரு என்னும் திக்கா! திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.
DivineInfoGuru.com
The Enlightening Path to Divine Consciousness
அசுவினி : தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன் எக்கால் எப்பயன் நின் திறம் அல்லால் எனக்கு உளதே மிக்கார் தில்லையுள் விருப்பா மிக வடமேரு என்னும் திக்கா! திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.
பூராடம் : நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய் மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய் பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.
திருவோணம் / ஓணம் : வேதம் ஓதி வெண்நூல் பூண்ட வெள்ளை எருது ஏறி பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார் நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே.
அவிட்டம் : எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழியப் பண்ணின் இடைமொழி பாடிய வானவரதா பணிவார் திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரா திருவேதிக்குடி நண்ணரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே.
சதயம் : கூடிய இலயம் சதி பிழையாமைக் கொடி இடை இமையவள் காண ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்று தேடிய வானோர் சேர் திருமுல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.
பூரட்டாதி : முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின் நோக்கும் முறுவலிப்பும் துடிகொண்ட கையும் துதைந்த வெண்ணீறும் சுரிகுழலாள் படி கொண்ட பாகமும் பாய்புலித் தோலும் என் பாவி நெஞ்சில் குடி கொண்டவா தில்லை அம்பலக் கூத்தன் குரை கழலே.
உத்திரட்டாதி : நாளாய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கு ஆளாய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம் கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத்திறம் அருளிக் கோள் ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.
ரேவதி : நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டி ஆண்டாய் ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய் நிலாவி நிற்க நோயவை சாரும் ஆகில் நோக்கி நீ அருள் செய்வாயே.
மூலம் நட்சத்திர காயத்ரி மந்திரம் ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத் 27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்களை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும். CLICK HERE for All 27 Nakshatra Gayatri Mantras.