Tag «navratri bhog for 9 days»

Navarathri Recipes – Pattani Masala Sundal

பட்டாணி மசாலா சுண்டல்   என்னென்ன தேவை? காய்ந்த பட்டாணி-ஒரு கப்,  இஞ்சி-பூண்டு விழுது-ஒரு டீஸ்பூன்,  புதினா, கொத்தமல்லி-சிறிதளவு,  சீரகம்- கால் டீஸ்பூன், எண்ணெய்,உப்பு-தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க:  காய்ந்த  மிளகாய்-3,  பட்டை-சிறிய துண்டு,  ஏலக்காய், கிராம்பு- தலா ஒன்று,  சோம்பு- கால் டீஸ்பூன். எப்படி செய்வது? காய்ந்த படடாணியை 8 மணி  நேரம் ஊறவிடவும். பிறகு,குக்கரில் போட்டு வேக வைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில்  வறுத்துப் பொடிக்கவும். வாணலயில்எண்ணெயை சூடாக்கி, சீரகம், தாளித்து ….. …

Navarathri Recipes – Poomparuppu Sundal

 பூம் பருப்பு சுண்டல் என்னென்ன தேவை?  கடலைப்பருப்பு- ஒரு கப்,  கீறிய பச்சை மிளகாய்-ஒன்று,  காய்ந்த மிளகாய்-2,  இஞ்சித் துருவல்-அரை டீஸ்பூன்,  மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்,  கொத்தமல்லி-சிறிதளவு,  தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,  கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-கால் டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,  பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் தாளித்து, வேக …

Navarathri Recipes – Pasiparuppu Sundal

பாசிப்பருப்பு  சுண்டல் என்னென்ன தேவை? பாசிப்பருப்பு-ஒரு கப்,  பச்சை மிளகாய்-2,  இஞ்சித் துருவல்-ஒரு டீஸ்பூன்,  கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தலா கால் டீஸ்பூன்,  கறிவேப்பில்லை-சிறிதளவு,  தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,  எண்ணெய், உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின் அதை மலர வேகவிடவும். வாணலியில்  எண்ணெய் சூடாக்கி.. கடுகு, உளுத்தம்பருப்பு,கீறிய பச்ச மிளகாய், கறிவேப்பில்லை,இஞ்சித்துருவல், பெருங்காயத்தூள் தாளித்து, வேக வைத்த பருப்பு,  உப்பு …

Navarathri Recipes – Kollu Sundal

கொள்ளு சுண்டல் என்னென்ன தேவை? துளைகட்டிய கொள்ளு-ஒரு கப், காய்ந்த மிளகாய்-2,  கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள்-அரை டீஸ்பூன்,  கறிவேப்பில்லை- சிறிதளவு,  தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,  எண்ணெய், உப்பு- தேவையான அளவு. எப்படி செய்வது? முளைகட்டிய கொள்ளுவை குக்கரில் வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பில்லை, காய்ந்த  மிளகாய், இஞ்சித் துருவல்,பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெந்த கொள்ளு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல் தூவி  இறக்கவும்

Narathri Recipes – Karamani Inippu Sundal

காராமணி இனிப்பு சுண்டல்   என்னென்ன தேவை? வெள்ளை காராமணி-ஒரு கப்,  வெல்லம்-அரை கப், நெய்-2 டீஸ்பூன்,  ஏலக்காய்த்தூள்- கால் டீஸ்பூன்,  தேங்காய்  துருவல்-3 டேபிள்ஸ்பூன். எப்படி செய்வது? வெள்ளை காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில்  நெய்யை சூடாக்கி, காராமணியை சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய்  துருவல் தூவி இறக்கவும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுண்டல் இது.

Navarathri Recipes – Vellai Kondakadalai Sundal

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் என்னென்ன தேவை?  முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை-ஒரு கப், காய்ந்த மிளகாய்-3, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன், கறிவேப்பில்லை-சிறிதளவு, தேங்காய் துருவல்-4 டிஸ்பூன், எண்ணெய்-2 டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? முளைகட்டிய கொண்டைக்கடலையை குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு,  கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். அதில் வெந்த கடலை, தேவையான உப்பு போட்டு கிளறவும்.  இறக்குவதற்கு முன் …

Importance and benefits of Navarathri Pooja Offerings/Prasadam

நவராத்திரி பிரசாத பலன்கள் CLICK HERE TO KNOW MORE ABOUT NAVARATRI 2021 நவராத்திரி பண்டிகை 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும். நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் விநியோகிப்பது நல்லது. முதல் நாள்: வெண்பொங் கலை பிரசாதமாகக் கொடு ப்பது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும். இரண்டாம் நாள்: புளியோதரையை பிரசாதமாகக் கொடுக்கலாம். …

Navarathri Prasadham Recipes – நவராத்திரி பிரசாதங்கள்

நவராத்திரி பிரசாதங்கள் நவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம். முதல் நாள் – கற்கண்டு பாயசம் இரண்டாம் நாள் – புளியோதரை சாதம் மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல் நான்காம் நாள் – கதம்ப சாதம் ஐந்தாம் நாள் – தயிர்சாதம் ஆறாம் நாள் – தேங்காய் சாதம் ஏழாம் நாள் – எலுமிச்சம்பழச் சாதம் எட்டாம் நாள் – பாசிப்பருப்பு, பால், வெல்லம், …