Tag «navratri song»

Navaratri Songs – Karunai Deivame Karpagame

கருணை தெய்வமே கற்பகமே காண வேண்டும் உன் தன் பொற்பதமே (என் கருணை) உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய் உனையன்றி வேறே யாரோ என் தாய் (கருணை) ஆனந்த வாழ்வே அளித்திடல் வேண்டும் அன்னையே என் மேல் இரங்கிடல் வேண்டும் நாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும் நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)

Manikka Venaiyenthum Kalaivani Navarathri Songs

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி தேந்தமிழ் சொல்லெடுத்துப் பாடவந்தோமம்மா பாடவந்தோமம்மா பாடவந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ – இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா (மாணிக்க) நாமணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் (மாணிக்க) வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாய் – எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே – என்றும் அள்ளி அருளைத் தரும் அன்னையும் நீயே …

Sri Chakra Raja Simmasa – Navarathri Songs

ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி (ஸ்ரீ சக்ர) ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி நாக கங்கண நடராஜ மனோகரி ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி (ஸ்ரீ சக்ர) பலவிதமா யுன்னைப் பாடவும் ஆடவும் பாடிக் கொண்டாடுமன்பர் பதமலர் சூடவும் உலக முழுதும்என தகமுறக் காணவும் ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி (ஸ்ரீ சக்ர) உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டிவைத்தாய் நிழலெனத் …

Devi Neeye Thunai – Navarathri Songs

தேவி நீயே துணை தென்மதுரை வாழ் மீனலோசனி (தேவி) தேவாதி தேவன் சுந்தரேசன் சித்தம் கவர் புவன சுந்தரி அம்பா (தேவி) மலையத்வஜன் மாதவமே – காஞ்சன மாலை புதல்வி மஹாராக்னி அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி)

Navarathri Pooja Songs in Tamil Lyrics

அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை என் அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை என் அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை என் அம்பா வெம்பவ நோயற அன்பர் தமக்கருளும் வெம்பவ நோயற அன்பர் தமக்கருளும் வெம்பவ நோயற அன்பர் தமக்கருள் கதம்ப வனக் குயிலே கதம்ப வனக் குயிலே சங்கரி ஜகதம்மா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை …

Navarathri Golu song lyrics in Tamil

நீ இரங்காயெனில் புகலேது அம்பா நிகில ஜகன்னாதன் மார்பில் உறைதிரு (நீ இரங்காயெனில்) தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ சகல உலகிற்கும் நீ தாயல்லவோ அம்பா (நீ இரங்காயெனில்) பாற்கடலில் உதித்த திருமளியே – ள பாக்யலக்ஷ்மி என்னை கடைக்கணியே நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் – மெய் ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா (நீ இரங்காயெனில்)

Navarathri Songs in Tamil

நானொரு விளையாட்டு பொம்மையா ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு நானிலத்தில் பல பிறவியெடுத்து திண்டாடியது போதாதா (தேவி) – உந்தனுக்கு (நானொரு) அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று அலறுவதைக் கேட்பதானந்தமா ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே திருவுளம் இரங்காதா (தேவி) – உந்தனுக்கு (நானொரு)

Navarathri Golu Songs

உன்னையல்லால் வேறே தெய்வம் இல்லையம்மா உலகெல்லாம் ஈன்ற அன்னை (உன்னையல்லால்) என்னையோர் வேடமிட்டுலக நாடக அரங்கில் ஆடவிட்டாயம்மா இனியாட முடியாது என்னால் திருவுள்ளம் இரங்கி ஆடினது போதுமென்று ஓய்வளிக்க (உன்னையல்லால்) நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷிஎன பலபெயருடன் எங்கும் நிறைந்தவள் என் மனக்கோயிலினில் எழுந்தருளிய தாயே திருமயிலை வளரும் (உன்னையல்லால்)

Navarathri Pooja Songs Lyrics in Tamil

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா தேவி (கற்பகவல்லி) பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பகவல்லி) நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால் நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ? ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள? ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா (கற்பகவல்லி) எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும் நல்லாட்சி செய்திடும் நாயகியே நித்ய கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த உல்லாசியே உமா உனை …