Thiruppugazh Song 256 – திருப்புகழ் பாடல் 256
திருப்புகழ் பாடல் 256 – திருத்தணிகைராகம் – ஆனந்த பைரவி; தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)தகதிமி-2, தகிட-1 1/2 தனதன தானம் தனதன தானம்தனதன தானம் …… தனதான கலைமட வார்தஞ் சிலையத னாலுங்கனவளை யாலுங் …… கரைமேலே கருகிய காளம் பெருகிய தோயங்கருதலை யாலுஞ் …… சிலையாலுங் கொலைதரு காமன் பலகணை யாலுங்கொடியிடை யாள்நின் …… றழியாதே குரவணி நீடும் புமணி நீபங்குளிர்தொடை நீதந் …… தருள்வாயே சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்திருமகள் நாயன் …