Hariyum Aranum Inainthu Petra Selvanam
அரியும் அரனும் இணைந்து பெற்ற செல்வனாம் ஆதிபராசக்தி மகிழ் மைந்தனாம் அவன் இணையில்லா தெய்வமவன் இன்பமளிப்பவன் ஈடில்லா சபரிமலை வாழும் எங்கள் ஐயப்பன் உள்ளமெனும் கோவிலிலே வாழ்பவன் அவன் எருமேலி தனில் வாழும் எங்கள் ஈஸ்வரன் ஏறுமயில் வேலவனின் அருமை சகோதரன் – எங்கள் அய்யப்பன் ஐங்கரனின் தம்பியவன் எங்கள் அய்யப்பன் ஐந்து மலைக்கரசன் அவன் எங்கள் அய்யப்பன் ஓம்காரப் பொருளென்னும் வேத நாயகன் – எங்கள் அய்யப்பன்