ஆனந்த தாண்டவ நாராஜன் ஆனந்த
முகில் வண்ணன் நாராயணன்
ஆவலுடன் ஈன்றெடுத்த அழகு மைந்தன்
தேவர்கள் மகிழும் வண்ணம்
தேன்மலை சபரியிலே கோயில் கொண்டவன்
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா என்ற
திவ்ய நாமத்தைச் சொன்னவர்க்கே
தர்ம சாஸ்தாவின் அருள் உண்டு திண்ணமாக
எண்ணமெல்லாம் ஐயன் மேல் வைத்து அந்தக்
கண்ணன் மகனின் ஆலயத்தை வலம் வந்தவர்க்கே
சர்வ மங்கள உண்டாகும் சத்தியமான
பொன்னு பதினெட்டுபடி மேல் ஏறி
ஐயன் தரிசனத்தைக் காணச் செல்லுவோம்
சுவாமி மாரே ஐயப்பன் மாரே
சரணம் சரணமே சரணம் பொன்னைய்யப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன்னைய்யப்பா
சரணம் சரணம் என்று சொல்லிப்பாடுவோம்
சபரிமலையிலே ஒன்று கூடுவோம்
கார்த்திகையில் மாலைதனைப் போட்டுக் கொள்ளுவோம்
மார்கழியில் அவன் புகழ் பாடி மகிழ்வோம் (சரணம் சரணமே)
பள்ளிக்கட்டைக் கட்டிக்கொண்டு யாத்திரை செல்ல
கல்லும் முள்ளும் மெத்தையென்று பாதங்கள் செல்ல
கோட்டை எரிமேலிதன்னில் பேட்டையும் துள்ள
நாம் ஆடிப்பாடி செல்வோம் ஐயன் புகழ் மணக்க (சரணம் சரணமே)
காடுவழி போகும்போது கடுவாய் கரடி புலி
யானையைக் கண்டு அஞ்சாத பேர்களுமுண்டோ
சமயத்தில் வந்து காக்க மணிகண்டன் துணையுண்டு
சாஸ்தாவை நம்பி நாம் நடை கட்டுவோம் அந்த
சாஸ்தாவை நம்பி நாம் நடைகட்டுவோம் (சரணம் சரணமே)
பொன்னாபரண மணிந்த பொன்னம்பல வாசனவன்
கற்பூரதீபமும் கண்டு மகிழ்ந்திடுவோம்
ஜோதியைக் கண்டவுடனே நாமெல்லோரும்
ஒன்று சேர்ந்து கூட்டுச் சரண கோஷமும் போட்டு மகிழ்வோம் (சரணம் சரணமே)