Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: தத்துவ முறைமை
தத்துவ முறைமை ஐம்பூதத் தாலே அலக்கழிந்த தோடமறஎம்பூத நாதனருள் எய்துநாள் எந்நாளோ. 1. சத்தமுத லாம்புலனிற் சஞ்சரித்த கள்வரெனும்பித்தர்பயந் தீர்ந்து பிழைக்குநாள் எந்நாளோ. 2. நாளும் பொறிவழியை நாடாத வண்ணம்எமைஆளும் பொறியால் அருள்வருவ தெந்நாளோ. 3. வாக்காதி யானகன்ம மாயைதம்பால் வீண்காலம்போக்காமல் உண்மை பொருந்துநாள் எந்நாளோ. 4. மனமான வானரக்கைம் மாலையாக் காமல்எனையாள் அடிகளடி எய்துநாள் எந்நாளோ. 5. வேட்டைப் புலப்புலையர் மேவாத வண்ணமனக்காட்டைத் திருத்திக் கரைகாண்ப தெந்நாளோ. 6. உந்து பிறப்பிறப்பை உற்றுவிடா தெந்தையருள்வந்து பிறக்க …