Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: குமரமரபின் வணக்கம்
குமரமரபின் வணக்கம் துய்ய கரமலரால் சொல்லாமல் சொன்னவுண்மைஐயனைக்கல் லால்அரசை யாமணைவ தெந்நாளோ. 1. சிந்தையினுக் கெட்டாத சிற்சுகத்தைக் காட்டவல்லநந்தியடிக் கீழ்க்குடியாய் நாமணைவ தெந்நாளோ. 2. எந்தை சனற்குமர னாதிஎமை ஆட்கொள்வான்வந்த தவத்தினரை வாழ்த்துநாள் எந்நாளோ. 3. பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவிதமெய்கண்ட நாதன்அருள் மேவுநாள் எந்நாளோ. 4. பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்த மாகவுண்மைசாதித்தார் பொன்னடியைத் தான்பணிவ தெந்நாளோ. 5. சிற்றம் பலமன்னுஞ் சின்மயராந் தில்லைநகர்க்கொற்றங் குடிமுதலைக் கூறுநாள் எந்நாளோ. 6. குறைவிலருள் ஞானமுதல் கொற்றங் குடியடிகள்நறைமலர்த்தாட் கன்புபெற்று …