Thayumanavar Songs – ஆக்குவை
ஆக்குவை ஆக்குவை மாயை யாவும் நொடியினில் அவற்றை மாளநீக்குவை நீக்க மில்லா நினைப்பொடு மறப்பு மாற்றிப்போக்கொடு வரவு மின்றிப் புனிதநல் லருளா னந்தந்தாக்கவுஞ் செய்வா யன்றோ சச்சிதா னந்த வாழ்வே. 1.
The Enlightening Path to Divine Consciousness
ஆக்குவை ஆக்குவை மாயை யாவும் நொடியினில் அவற்றை மாளநீக்குவை நீக்க மில்லா நினைப்பொடு மறப்பு மாற்றிப்போக்கொடு வரவு மின்றிப் புனிதநல் லருளா னந்தந்தாக்கவுஞ் செய்வா யன்றோ சச்சிதா னந்த வாழ்வே. 1.
தன்னை தன்னை அறியத் தனதருளால் தானுணர்த்தும்ம்ன்னைப் பொருளெனவே வாழாமற் பாழ்நெஞ்சேபொன்னைப் புவியைமடப் பூவையரை மெய்யெனவேஎன்னைக் கவர்ந்திழுத்திட் டென்னபலன் கண்டாயே. 1.
திடமுறவே திடமுறவே நின்னருளைச் சேர்த்தென்னைக் காத்தாளக்கடன்உனக்கென் றெண்ணிநின்னைக் கைகுவித்தேன் நானலனோஅடைவுகெட்ட பாழ்மாயை ஆழியிலே இன்னமல்லல்படமுடியா தென்னாவிப் பற்றே பராபரமே. 1. ஆராமை கண்டிங் கருட்குருவாய் நீயொருகால்வாராயோ வந்து வருத்தமெல்லாந் தீராயோபூராய மாகஅருட் பூரணத்தில் அண்டமுதல்பாராதி வைத்த பதியே பராபரமே. 2. வாழாது வாழஉனை வந்தடைந்தோர் எல்லாரும்ஆழாழி என்னஅரு ளானார் அழுக்காற்றோளேழாய் எனவுலகம் ஏசுமினி நானொருவன்பாழாகா வாறுமுகம் பார்நீ பராபரமே. 3. உள்ளத்தி னுள்ளே ஒளித்தென்னை ஆட்டுகின்றகள்ளக் கருணையையான் காணுந் தரமாமோவெள்ளத்தை மாற்றி விடக்குண்பார் நஞ்சூட்டும்பள்ளத்தின் மீன்போற் பதைத்தேன் …
முகமெலாம் முகமெ லாங்கணீர் முத்தரும் பிடச்செங்கை முகழ்ப்பஅகமெ லாங்குழைந் தானந்த மாகநல் லறிஞர்இகமெ லாந்தவம் இழைக்கின்றார் என்செய்கோ ஏழைசகமெ லாம்பெற நல்லருள் உதரமாச் சமைந்தோய். 1.
எடுத்த தேகம் எடுத்த தேகம் பொருளாவி மூன்றும்நீஎனக்கொன் றில்லை எனமோன நன்னெறிகொடுத்த போது கொடுத்ததன் றோபினுங்குளறி நானென்று கூத்தாட மாயையைவிடுத்த வாறுங்கண் ணீரொடு கம்பலைவிலகு மாறுமென் வேட்கைப்ர வாகத்தைத்தடுத்த வாறும் புகலாய் சிரகிரித்தாயுமான தயாபர மூர்த்தியே. 1. நோயும் வெங்கலிப் பேயுந் தொடரநின்நூலிற் சொன்ன முறைஇய மாதிநான்தோயும் வண்ணம் எனைக்காக்குங் காவலுந்தொழும்பு கொள்ளுஞ் சுவாமியு நீகண்டாய்ஓயுஞ் சன்மம் இனியஞ்சல் அஞ்சலென்றுலகங்கண்டு தொழவோர் உருவிலேதாயுந் தந்தையும் ஆனோய் சிரகிரித்திடமுறவேதாயு மான தயாபர மூர்த்தியே. 2.
காடுங்கரையும் காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட் டோட அதன்பிறகே ஓடுந் தொழிலாற் பயனுளதோ ஒன்றாய்ப் பலவா யுயிர்க்குயிராய் ஆடுங் கருணைப் பரஞ்சோதி அருளைப் பெறுதற் கன்புநிலை தேடும் பருவம் இதுகண்டீர் சேர வாருஞ் சகத்தீரே. 1. சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம்பொருளைக் கைவந் திடவே மன்றுள்வெளி காட்டு மிந்தக் கருத்தைவிட்டுப் பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுத வேண்டா முத்திதருந் தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாருஞ் சகத்தீரே. 2. காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் …
ஏசற்ற அந்நிலை ஏசற்ற அந்நிலையே எந்தைபரி பூரணமாய்மாசற்ற ஆனந்த வாரி வழங்கிடுமேஊசற் சுழல்போல் உலகநெறி வாதனையால்பாசத்துட் செல்லாதே பல்காலும் பாழ்நெஞ்சே. 1. பாழாகி அண்டப் பரப்பை எலாம் வாய்மடுத்தும்ஆழாழி இன்பத் தழுந்தப் படியாயோதாழாயோ எந்தையருள் தாள்கீழ்நெஞ் சேஎனைப்போல்வாழாது வாழ்ந்தழியா வண்ண மிருப்பாயே. 2. இருப்பாய் இருந்திடப்பே ரின்பவெளிக் கேநமக்குக்குருப்பார்வை யல்லாமற் கூடக் கிடைத்திடுமோஅருட்பாய் நமக்காக ஆளவந்தார் பொன்னடிக்கீழ்மருட்பேயர் போலிருக்க வாகண்டாய் வஞ்சநெஞ்சே. 3. வஞ்சமோ பண்டையுள வாதனையால் நீஅலைந்துகொஞ்சமுற் றாயுன்னைக் குறைசொல்ல வாயுமுண்டோஅஞ்சல் அஞ்சல் என்றிரங்கும் ஆனந்த …
கல்லாலின் கல்லாலின் நீழல்தனில் ஒருநால் வர்க்குங்கடவுள்நீ உணர்த்துவதுங் கைகாட் டென்றால்சொல்லாலே சொலப்படுமோ சொல்லுந் தன்மைதுரும்புபற்றிக் கடல்கடக்குந் துணிபே யன்றோ. 1. அன்றோஆ மோஎனவுஞ் சமய கோடிஅத்தனையும் வெவ்வேறாய் அரற்ற நேரேநின்றாயே நினைப்பெறுமா றெவ்வா றாங்கேநின்னருள்கொண் டறிவதல்லால் நெறிவே றுண்டோ. 2. நெறிபார்க்கின் நின்னையன்றி அகிலம் வேறோநிலநீர்தீக் கால்வானும் நீய லாதகுறியாதும் இல்லையென்றால் யாங்கள் வேறோகோதையொரு கூறுடையாய் கூறாய் கூறாய். 3. கூறாய ஐம்பூதச் சுமையைத் தாங்கிக்குணமிலா மனமெனும்பேய்க் குரங்கின் பின்னேமாறாத கவலையுடன் சுழல என்னைவைத்தனையே பரமேநின் மகிமை …
உடல்பொய்யுறவு உடல்பொய் யுறவாயின் உண்மையுற வாகக்கடவாரார் தண்ணருளே கண்டாய் – திடமுடனேஉற்றுப்பார் மோனன் ஒருசொல்லே உண்மைநன்றாய்ப்பற்றிப்பார் மற்றவெல்லாம் பாழ். 1. பாராதி பூதமெல்லாம் பார்க்குங்கால் அப்பரத்தின்சீராக நிற்குந் திறங்கண்டாய் – நேராகநிற்குந் திருவருளில் நெஞ்சேயாம் நிற்பதல்லால்கற்குநெறி யாதினிமேற் காண். 2. மெய்யான தன்மை விளங்கினால் யார்க்கேனும்பொய்யான தன்மை பொருந்துமோ – ஐயாவேமன்னும்நி ராசைஇன்னம் வந்ததல்ல உன்னடிமைஎன்னும்நிலை எய்துமா றென். 3. அறியாமை மேலிட் டறிவின்றி நிற்குங்குறியேற் கறிவென்ற கோலம் – வறிதேயாம்நீயுணர்த்த நான்உணரும் நேசத்தா லோஅறிவென்றேயெனக்கோர் நாமமிட்ட …