Thayumanavar Songs – எங்கு நிறைகின்ற பொருள்
10. எங்கு நிறைகின்ற பொருள் அவனன்றி யோரணுவும் அசையாதெ னும்பெரிய ஆப்தர்மொழி யொன்றுகண்டால் அறிவாவ தேதுசில அறியாமை ஏதிவை அறிந்தார்கள் அறியார்களார் மௌனமொ டிருந்ததார் என்போ லுடம்பெலாம் வாயாய்ப் பிதற்றுமவரார் மனதெனவும் ஒருமாயை எங்கே இருந்துவரும் வன்மையொ டிரக்கமெங்கே புவனம் படைப்பதென் கர்த்தவிய மெவ்விடம் பூதபே தங்களெவிடம் பொய்மெயிதம் அகிதமேல் வருநன்மை தீமையொடு பொறைபொறா மையுமெவ்விடம் எவர்சிறிய ரெவர்பெரிய ரெவருறவ ரெவர்பகைஞர் யாதுமுனை யன்றியுண்டோ இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி எங்குநிறை கின்றபொருளே.1. அன்னே யனேயெனுஞ் சிலசமயம் …