Kakkai Siraginile Nandalala Lyrics in Tamil
காக்கைச் சிறகினிலே
நந்தலாலா – நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
நந்தலாலா
காக்கைச் சிறகினிலே
நந்தலாலா – நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
நந்தலாலா
பார்க்கு மரங்கலெல்லாம்
நந்தலாலா – நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே
நந்தலாலா
காக்கைச் சிறகினிலே
நந்தலாலா – நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
நந்தலாலா
கேட்கு மொலியிலெல்லாம்
நந்தலாலா – நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா
காக்கைச் சிறகினிலே
நந்தலாலா – நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
நந்தலாலா
தீக்குள் விரலைவைத்தால்
நந்தலாலா – நின்னைத்
தீண்டுமின்பம் தோன்றுதடா
நந்தலாலா
நந்தலாலா நந்தலாலா