மஹாப்பிரபு எங்கள் மஹாப்பிரபு
மலை மேலே வாழும் மஹாப்பிரபு
இன்னிசையில் பாடி இணைந்தது என்மனம்
என்குரல் உன்கரம் கொடுத்த வரம் (மஹா)
சப்தசுவரங்கள் செய்யும் லீலை உன் கண்ணசைவில்
சாபவிமோசனம் கண்டதய்யா
வரராஜ மலர்கொண்டு நான் செய்யும் என்பூஜை
உன்பாதம் சேரும் பாக்கியம் தான் காணும் (மஹா)
உந்தன்நினைவு என்வாழ்வில் ஸ்ருதிமீட்டும்
என்மொழி உன்புகழ் கருதி பாடும்
மனதொரு மனதாக உன் எண்ணம் லயமாக
வாழ்ந்திடும் யோகம் அது ஒன்று தான் போதும் (மஹா)
DivineInfoGuru.com