என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
சயனத்தில் ஆதி சேஷன் மேலே
திருவடி திருமகள் மடி மேலே
பூலோக நாயகன் ஸ்ரீ ரங்கன் (என் நெஞ்சில்)
சயனிக்கும் பெருமாளின் தொப்புள் கொடி
கமலத் தொப்புள் கொடி மேல் ப்ரம்ஹன் அமர்ந்த படி (சயனிக்கும்)
உலகத்தின் உயிர்களைப் படைத்த படி
அப்படைப்பினைத் திருமால் காத்தபடி (உலகத்தின்)
அண்டம் பகிரண்டம் அதைக் காக்கும் அவன் கோதண்டம்
விண்ணையும் மண்ணுலகையும் அளக்கும் அவ்வாமனனின் பாதம் (அண்டம்)
ஹரி ஹரி ஹரி என தினம் ஸ்மரி
ஹரி ஹரி ஹரி என தினம் ஸ்மரி
நான் வணங்கிடும் இறைவனோ சங்கு சக்ர தாரி (என்னெஞ்சில்)
திருப்பதியில் எழுந்தருளும் திருமாலும் நீயே – உன்
திருமார்பினில் அமர்ந்திருப்பது பத்மாவதி தாயே (திருப்பதியில்)
உடுப்பியினில் தவழ்கின்ற ஸ்ரீ க்ருஷ்ணன் நீயே – உன்
அருள் வேண்டி நிற்கின்றேன் நான் உந்தன் சேயே (உடுப்பியினில்)
நெறியையும் அற வழியையும் எமக்குணர்த்த பல அவதாரம்
எடுத்தாய் எடுத்துரைத்தாய் அதுவே வாழ்வின் ஆதாரம் (நெறியையும்)
அருள் தரும் தேவா வரம் தர வா வா
அருள் தரும் தேவா வரம் தர வா வா
மூவுலகையும் ஆள்கின்ற த்ரிவிக்ரம ரூபா (என்னெஞ்சில்)