சம்பா ரவை பாயாசம்
தேவையான பொருட்கள்
சம்பா ரவை – இரண்டு கப்
கோவா – ஒரு கப்
சர்க்கரை – மூன்று கப்
கேசரி பவுடர் – சிறிதளவு
பால் – ஆறு கப்
ஏலக்காய் – ஒன்று
முந்திரி – பத்து
திராட்சை – பத்து
சாரை பருப்பு – இரண்டு டீஸ்பூன்
நெய் – தேவைகேற்ப
மஞ்சள் எசென்ஸ் – சில துளிகள்
பிரிஞ்சி இலை – ஒன்று
செய்முறை
குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
பின், கழுவிய சம்பா ரவையை சேர்த்து வதக்கி, ஆறு கப் தண்ணீர் ஊற்றி கலக்கி மூடிவைத்து நன்றாக குழைய வேகவிடவும்.
பிறகு, அதனுடன் கேசரி பவுடர், சர்க்கரை, கோவா, பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
பின், கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி, திராட்சை, சாரை பருப்பு சேர்த்து வறுத்து அதில் சேர்க்கவும்.
கடைசியில் எசன்ஸ் சேர்த்து கலக்கி இறக்கவும்.