நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா!
நீ இல்லாமல் உலகங்கள்
இயங்காதய்யா!
நீ தானே அனைத்திற்கும்
எல்லையய்யா!
பதினெட்டாம் படியேறிப் பணிந்தோமானால் உண்மை பக்தர்களின் பாவங்கள் தொலைந்தே போகும்!
கதியின்றித் தவித்திடும் கன்னிச்சாமி என்றும்
கலங்கிட வேண்டாமே ஐயன் காப்பான்!
இருமுடி தரித்தவர் எந்த நாளும் உலகில்
இன்னல்கள் படமாட்டார் இறைவன் காப்பார்!
மறுமையும் இம்மையும் மலங்கள் நீக்கி மக்கள் மனங்களில் அருளாட்சி
புரியும் வள்ளல்!
பயங்கர பாதையில் நடந்தே செல்வார் காட்டில் பாயும் புலிகூடப் பதுங்கித் தோன்றும்!
பயமின்றிச் சரணங்கள் கூவிச் சென்றால் ஐயன் பக்தரை எந்நாளும் பரிந்து காப்பான்!
நீ இல்லாமல் உலகங்கள்
இயங்காதய்யா!
நீ தானே அனைத்திற்கும்
எல்லையய்யா!