Thiruppugazh Song 128 – திருப்புகழ் பாடல் 128

திருப்புகழ் பாடல் 128 – பழநி
ராகம் – தேஷ்; தாளம் – அங்கதாளம் (5 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2

தனன தனத்த தாதத தனன தனத்த தானன
தனன தனத்த தானன …… தனதான

கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
கனதன வெற்பு மேல்மிகு …… மயலான

கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய
கனதன மொத்த மேனியு …… முகமாறும்

அதிபல வஜ்ர வாகுவும் அயில்நுனை வெற்றி வேலதும்
அரவு பிடித்த தோகையு …… முலகேழும்

அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
அபிநவ பத்ம பாதமு …… மறவேனே

இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு
ரணமுக சுத்த வீரிய …… குணமான

இளையவ னுக்கு நீண்முடி அரசது பெற்று வாழ்வுற
இதமொ டளித்த ராகவன் …… மருகோனே

பதினொரு ருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை
பரிவோடு நிற்கு மீசுர …… சுரலோக

பரிமள கற்ப காடவி அரியளி சுற்று பூவுதிர்
பழநி மலைக்குள் மேவிய …… பெருமாளே.