Thiruppugazh Song 140- திருப்புகழ் பாடல் 140

திருப்புகழ் பாடல் 140 – பழநி

தனத்த தனதன தனதன தந்தத்
தனத்த தனதன தனதன தந்தத்
தனத்த தனதன தனதன தந்தத் …… தனதான

கறுத்த குழலணி மலரணி பொங்கப்
பதித்த சிலைநுத லணிதில தம்பொற்
கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச் …… சிரமான

கழுத்தி லுறுமணி வளைகுழை மின்னக்
குவட்டு முலையசை படஇடை யண்பைக்
கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக் …… கொடிபோலச்

சிறுத்த களமிகு மதமொழு கின்சொற்
குயிற்க ளெனமட மயிலெகி னங்கட்
டிருக்கு நடைபழ கிகள்கள் பங்கச் …… சுடைமாதர்

திகைத்த தனமொடு பொருள்பறி யொண்கட்
குவட்டி யவர்வலை யழலுறு பங்கத்
திடக்கு தலைபுலை யவர்வழி யின்பைத் …… தவிர்வேனோ

பறித்த விழிதலை மழுவுழை செங்கைச்
செழித்த சிவபர னிதழிநல் தும்பைப்
படித்த மதியற லரவணி சம்புக் …… குருநாதா

பருத்த அசுரர்க ளுடன்மலை துஞ்சக்
கொதித்த அலைகட லெரிபட செம்பொற்
படைக்கை மணியயில் விடுநட னங்கொட் …… கதிர்வேலா

தெறித்து விழியர வுடல்நிமி ரம்பொற்
குவட்டொ டிகைகிரி பொடிபட சண்டச்
சிறப்பு மயில்மிசை பவரிகொ ளும்பொற் …… றிருபாதா

சிறக்கு மழகிய திருமகள் வஞ்சிக்
குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச்
சிலைக்கு ளணைகுக சிவமலை கந்தப் …… பெருமாளே.