திருப்புகழ் பாடல் 239 – சுவாமி மலை
ராகம் – காபி; தாளம் – ஆதி – திஸ்ர நடை (12)
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் …… தனதான
அமைவுற் றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற் …… கிசையாதே
அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத் …… தயராதே
தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக் …… கொடுபோகுஞ்
சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக் …… கடவேனோ
இமயத் துமயிற் கொருபக் கமளித்
தவருக் கிசையப் …… புகல்வோனே
இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
கிரையிட் டிடுவிக் …… ரமவேலா
சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
தவமுற் றவருட் …… புகநாடும்
சடுபத் மமுகக் குகபுக் ககனத்
தணியிற் குமரப் …… பெருமாளே.