அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:
Click Here for ஆடி வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை பாடல் – Kunguma Archanai Paadal | அம்பிகை குங்கும அர்ச்சனை பாடல் வரிகள் – Ambigai Kunguman Archanai Song Lyrics
குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள் கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம். பொதுவாக ஆடி வெள்ளி என்பது அம்பாளுக்கு வழிபாடு செய்யக்கூடிய முக்கிய தினமாக கருதப்பட்டு வருகிறது. இந்நாளில் அம்பாள் கோவில்களில் விசேஷமான பூஜைகளும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுவது
வழக்கம்.
அதே போல நாம் நம்முடைய வீட்டிலும் திருமாங்கல்யத்திற்கு வைக்கும் இந்த 1 பொருளை கொண்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து அவரின் திருநாமாவளிகளை உச்சரித்து வழிபட்டு வந்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் பல.
குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்கி அன்பும் ஆனந்தமும் பெருகும்:
- அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்வதை தரிசனம் செய்பவர்களுக்கு கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
- அடிக்கடி குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இருப்பவர்கள் இந்நாட்களில் அம்பாள் கோவிலுக்கு சென்று குங்கும அர்ச்சனையில் கலந்து கொள்ளலாம்.
- கலந்து கொள்ள முடியாதவர்கள் வீட்டிலேயே உங்கள் கைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
- அர்ச்சனை செய்து வந்த அந்த குங்குமத்தை தினமும் உங்களுடைய திருமாங்கல்யத்தில் மற்றும் நெற்றியிலும் இட்டுக் கொண்டால் கணவனுடைய ஆயுள் நீளும்.
- குடும்பத்தில் எந்த விதமான சண்டை, சச்சரவுகளும் வராது, விட்டுக் கொடுத்து நடந்து கொள்வார்கள்.
- மன இறுக்கம், மன உளைச்சல் போன்ற நவீன நோய்களுக்கு மருந்தாகவும் இந்த அர்ச்சனை உங்களுக்கு செயல்படும். எனவே ஆடி வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு அம்பிகையின் அருள் பெற்று அன்பான பெருவாழ்வு பெறுக.
குழந்தை பாக்கியம் கிட்டும்:
- கருத்தரிப்பதில் பிரச்சனைகள் இருப்பவர்கள் அல்லது
- கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்கள்,
- மாதவிடாய் கோளாறுகள், வயிற்று வலி, கருக்குழாய் அடைப்பு என்று
- கருப்பை சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் தீர ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு குங்குமம் கொண்டு 108 முறை அல்லது ஆயிரத்து எட்டு முறை அவரின் நாமாவளிகள் உச்சரித்து அர்ச்சனை செய்யலாம்.
- உங்களால் கோவிலுக்கு சென்று அதில் கலந்து கொள்ள முடியும் என்றால் அம்பாளுக்கு குங்குமம் உங்கள் கைகளால் வாங்கிக் கொடுத்து குங்கும அர்ச்சனை செய்வதை அங்கேயே அமர்ந்து கண்குளிர தரிசனம் செய்யலாம்.
- இவ்வாறு அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்வதால் நல்ல ஆரோக்கியமும் குணநலங்களும் கொண்ட குழந்தை பாக்கியம் அமையும்.