சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

2023 சனிபெயர்ச்சி எப்போது? | 2023 சனிபெயர்ச்சி பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal

சனி பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி, கர்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி, கண்டக சனி என எல்லாவித சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் மிக எளிய பரிகாரங்கள் உள்ளன.

சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்:

  • தினமும் சூரியன் எழுவதை தரிசித்து மூன்று முறை சூரியனுக்கு நல்லெண்ணெய் பூமியில் வார்க்கலாம். பின்பு மூன்று முறை நீர் வார்க்கவும்.
  • தினமும் காக்கைக்கு சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பின்பு கருப்பு எள் கலந்து, சிறு உருண்டைகளாக மூன்று பிடித்து வைக்கலாம். பின்பு நாய்க்கு உணவிடவும்.
  • முடிந்த பொழுது சிவன் கோவில்களை சுத்தம் செய்தல் நலம்.
  • ஒவ்வொரு சனி இரவு 8-9 வேளையில் அரச மரத்தடியில் இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வரலாம்.
  • கருப்பு எள்ளு, உளுந்து மற்றும் சர்க்கரை சேர்த்து பொடி செய்து தினமும் எறும்புகளுக்கு இட்டு வரலாம்.
  • தினசரி தூங்கு முன் கை மற்றும் கால் விரல்களின் நகங்களில் கடுகு அல்லது நல்லெண்ணெய் அழுத்தி தேய்த்து வரலாம்.
  • தினசரி ஒரு சர்க்ககம் சுந்தர காண்ட பாராயணம் மிகுந்த நன்மை தரும்.

மிக எளிய வாழ்வியல் பரிகாரங்கள்:

  • ஆஞ்சநேயர் வழிபாடு மிகவும் பலன் கொடுக்கும். சனிக் கிழமைகளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். முடிந்தால் வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்யவும்.
  • மாற்று திறனாளிகளுக்கும், துப்புரவு தொழிலாளர்களுக்கும், உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.
  • நீங்கள் தொழில் புரிபவர்கள் எனில், உங்களுக்கு கீழ் பணிபுரியும் வேலையாட்களுக்கு சனிக் கிழமைகளில் சம்பளம் கொடுங்கள்.
  • வீட்டிற்கு வெளியில், ஒரு மண்பானையில் தண்ணீர் வைத்து தானம் வழங்குங்கள்.
  • வெறும் காலில் நடை பயணம் மேற்கொள்ளுங்கள்.
  • மண் பானை தண்ணீரை பயன்படுத்துங்கள்.

அஷ்டம சனி பரிகாரங்கள் | Pariharam Ashtama Sani for Kataka Rasi 2023

12 ராசிகளுக்கு உரிய சனி பெயர்ச்சி பரிகாரங்கள் 2023 | Sani Peyarchi Pariharam 2023 for 12 Rasi

அஷ்டம சனி பரிகாரம் | Ashtama Sani Pariharam

சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

2023 சனிபெயர்ச்சி எப்போது? | 2023 சனிபெயர்ச்சி பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal

கர்ம சனி பரிகாரம் | Karma Sani Pariharam

Remedies for Ashtama Shani

விரய சனி பரிகாரம் | Viraya Sani | 12 இல் சனி