அஷ்டம சனி பரிகாரம் | Ashtama Sani Pariharam

அஷ்டம சனி நடக்கும் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்:

2023 சனிபெயர்ச்சி எப்போது? | 2023 சனிபெயர்ச்சி பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal

  • மாதந்தோறும் சிவ ஆலயங்களில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி பிரதோஷ வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது. பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.
  • காலையில் தினமும் குளித்து விட்டு காகத்துக்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
  • வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய்யில் தீபம் ஏற்றி வழிபடவும்.
  • சனி பகவானுக்கு கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து வரவும்.
  • சனிக்கிழமைகளில் வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சாற்றி வணங்கி வழிபடவும்.
  • சனிக்கிழமைகளில் அசைவ உணவுகளைக் கண்டிப்பாக சாப்பிடவே கூடாது. 
  • சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் குளியல் செய்தால் கெடுதலைக் குறைக்கும்.
  • தினந்தோறும் விநாயக பெருமான் வழிபாடு மற்றும் அனுமன் வழிபாடு ஆகியவை சனி பகவானின் தொல்லைகளைக் குறைக்கும்.
  • ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரையும், தேய்பிறை அஷ்டமி நாட்களில் கால பைரவரையும் வணங்கி வரவும்.
  • ஏழை மாணவர்களின் படிப்புச் செலவுக்கும், நடக்க இயலாதவர்களுக்கும், அன்னதானத்துக்கும் உதவி செய்யலாம்.
  • சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்குச் சென்று வணங்கி வழிபடலாம்.
  • வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்கி வருதல் மற்றும் ராம நாமத்தை தினமும் ஜபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்தும் விடுபடலாம்.
  • அஷ்டம சனி நடக்கும் காலங்களில் அடிக்கடி மொட்டை அடித்துக் கொள்வது நல்லது.

இதை முறையாகக் கடைப்பிடித்து வந்தால் சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். 

அஷ்டம சனி பரிகாரங்கள் | Pariharam Ashtama Sani for Kataka Rasi 2023

12 ராசிகளுக்கு உரிய சனி பெயர்ச்சி பரிகாரங்கள் 2023 | Sani Peyarchi Pariharam 2023 for 12 Rasi

அஷ்டம சனி பரிகாரம் | Ashtama Sani Pariharam

சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

2023 சனிபெயர்ச்சி எப்போது? | 2023 சனிபெயர்ச்சி பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal

கர்ம சனி பரிகாரம் | Karma Sani Pariharam

Remedies for Ashtama Shani

விரய சனி பரிகாரம் | Viraya Sani | 12 இல் சனி