2023 சனிபெயர்ச்சி | துலாம் ராசிக்கான பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal

வரும் சுபகிருது ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி தை 3ஆம் தேதி அதாவது 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். அதே போல் 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

சூரிய பகவானின் புத்திரரான சனி பகவான் நம் வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள், தீய செயல்களுக்கு ஏற்றார் போல் நன்மை தீமைகளை வழங்கக்கூடியவர். சனியானவர் கும்ப ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச்செயல்களை இனி வருகின்ற இரண்டரை ஆண்டுகள் அளிக்கவுள்ளார்.

சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான ஜென்ம ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான புத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

துலாம் ராசி அன்பர்களே…!!

துலாம் ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் ஐந்தாம் இடமான பஞ்சம ஸ்தானத்துக்கு பெயர்ச்சி அடைய இருக்கின்றார்.

பலன்கள்

சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் தவறிப்போன சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் தெளிவான முடிவுக்கு பின்பு வெற்றியை வெளிப்படுத்துவது நல்லது. போட்டித்தேர்வு தொடர்பான செயல்பாடுகளில் அதீத முயற்சியும், ஈடுபாடும் வேண்டும். பங்குச்சந்தை தொடர்பான முதலீடுகளில் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும். 

சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான லாப ஸ்தானத்தை பார்ப்பதினால் புதிய விஷயங்கள் தொடர்பான தேடல்களும், அதை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வமும் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் பிறக்கும். செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதினால் பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வாகனம் மற்றும் மனை சார்ந்த விஷயங்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். 

தவிர்க்க வேண்டியது என்னென்ன?

சனி ராசிக்கு ஐந்தாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் குலதெய்வ கோயிலில் தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகம் தொடர்பான பிரச்னைகளில் பொறுமையுடன் செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விருந்து மற்றும் கேளிக்கை தொடர்பான விஷயங்களில் கலந்து கொள்வீர்கள். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்தும் பொழுது கவனமுடன் இருக்க வேண்டும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும்.

புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் காலதாமதங்கள் ஏற்படும். அத்தை மற்றும் மாமன் வகை உறவுகளிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எந்தவொரு செயலிலும் அலட்சியம் இல்லாமல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

உடன்பிறந்தவர்களுக்கு உதவுவதில் சுயநலமின்றி இருப்பது உறவை காக்கும். பெரியோர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பொன், பொருட்களில் கவனம் வேண்டும்.

பிள்ளைகளின் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.

மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். எதிர்பாலின மக்களிடம் உண்டான சில பிரச்சனைகள் தீரும். முயற்சிக்கு உண்டான மதிப்பெண்களை பெறுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் கவனம் வேண்டும்.

பொருளாதாரம்:

வரவுகள் தேவைக்கேற்ப இருந்தாலும் பேராசை இல்லாமல் இருப்பது நல்லது. சுபகாரியம் தொடர்பான செயல்களால் சேமிப்புகள் குறையும். அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். சூதாட்டம் போன்ற செயல்களை தவிர்ப்பது பொருளாதார நெருக்கடியை குறைக்கும்.

உடல் ஆரோக்கியம்:

அடிவயிற்றில் சூடு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். நுரையீரல் தொடர்பான இன்னல்கள் குறையும். நேரத்திற்கு தகுந்தவாறு உணவுகளை எடுத்து கொள்ளவும். 

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் சிந்தனைகளில் தெளிவும், தோற்றப்பொலிவும் மேம்படும். மேலும் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் இருந்துவந்த காலதாமதம் குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும்.

கவனம்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் பேச்சுக்களில் கவனமும் விவேகமும் வேண்டும். மேலும் தம்பதியருக்குள் அனுசரித்து செல்வது நல்லது. கிடைக்கும் வருவாயை அசையா சொத்துக்களாக மாற்றிக் கொள்ளவும். எதிர்பாராத சில விரயங்களின் மூலம் சேமிப்புகள் குறையும்.

வழிபாடு

அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வர குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். திருவேற்காட்டில் உள்ள தேவி ஸ்ரீகருமாரியம்மனை வழிபட சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். 

பொதுப்பலன்களான இவற்றில் திசாபுத்திக்கு ஏற்ப மாற்றம் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.