2023 சனிபெயர்ச்சி | மீனம் ராசிக்கான பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal

வரும் சுபகிருது ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி தை 3ஆம் தேதி அதாவது 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். அதே போல் 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

சூரிய பகவானின் புத்திரரான சனி பகவான் நம் வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள், தீய செயல்களுக்கு ஏற்றார் போல் நன்மை தீமைகளை வழங்கக்கூடியவர். சனியானவர் கும்ப ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச்செயல்களை இனி வருகின்ற இரண்டரை ஆண்டுகள் அளிக்கவுள்ளார்.

சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான ஜென்ம ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான புத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

மீன ராசி அன்பர்களே…!!

சனியின் நாமம் : லாப சனி

உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது தங்களின் ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார்.

சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக ராசியையும், ஏழாம் பார்வையாக பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

பலன்கள்

பேச்சுக்களில் நிதானம் வேண்டும். குலதெய்வ வழிபாடு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சுரங்க பணியில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பாராத சில தனவரவுகளால் பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மேன்மை உண்டாகும்.

வீட்டில் சுபக்காரியங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் சூழ்நிலைகள் அறிந்து பேசுவது நன்மையை அளிக்கும். பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான பராமரிப்புச் செலவுகள் நேரிடலாம். புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

உத்தியோகஸ்தர்கள் தங்களின் பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைப்பதைக் காட்டிலும் தாமே முடிப்பது நன்மையை தரும். செய்யும் வேலையை திருப்தியுடன் செய்யவும். பணி நிமிர்த்தமான மாற்றங்களை தகுந்த ஆலோசனைகளுக்கு பிறகு முடிவு செய்யவும்.

பெண்கள் தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பதன் மூலம் மனத்தெளிவு உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தம்பதிகளுக்குள் சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும்.

இறைவழிபாடு தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும். திறமைக்கேற்ப வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் மற்றும் அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட எண்ணிய வெற்றி கிடைக்கும். தேர்வுக்கு தேவையான பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது மேன்மை தரும்.

வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த லாபங்களால் சேமிப்பு மேம்படும். தொழிலில் போட்டிகள் குறையும். பெருந்தன்மையான செயல்பாடுகளினால் சில அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலை மேற்கொள்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வேலையாட்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான காலம் ஆகும். விருதுகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தும் சிறுவாய்ப்புகளாக இருந்தாலும் அதை தகுந்த முறைகளில் பயன்படுத்திக் கொள்ளவும்.

வழிபாடு

மூல நட்சத்திரத்தன்று வடமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர தெளிவு கிடைக்கும்.

பொதுப்பலன்களான இவற்றில் திசாபுத்திக்கு ஏற்ப மாற்றம் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.