2023 சனிபெயர்ச்சி | ரிஷப ராசிக்கான பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal

வரும் சுபகிருது ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி தை 3ஆம் தேதி அதாவது 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். அதே போல் 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

சூரிய பகவானின் புத்திரரான சனி பகவான் நம் வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள், தீய செயல்களுக்கு ஏற்றார் போல் நன்மை தீமைகளை வழங்கக்கூடியவர். சனியானவர் கும்ப ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச்செயல்களை இனி வருகின்ற இரண்டரை ஆண்டுகள் அளிக்கவுள்ளார்.

சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான ஜென்ம ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான புத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

ரிஷப ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷப ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்துவந்த சனிபகவான் பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கின்றார்.

சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக அயன சயன ஸ்தானத்தை பார்ப்பதினால் தூக்கமின்மை சார்ந்த இன்னல்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகளையும், பயனற்ற கருத்து வேறுபாடுகளையும் குறைக்க இயலும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். கனவு சார்ந்த இன்னல்கள் குறையும்.

பயணங்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பமும், செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.

சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான சுக ஸ்தானத்தை பார்ப்பதினால் வாகனம் தொடர்பான பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதற்குண்டான பலன்களை கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும்.

பழைய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களோடு மனம் விட்டு பேசுவதன் மூலம் சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும்.

சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் எண்ணிய பணிகளை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் வாடிக்கையாளருடன் நல்ல உறவை உருவாக்கும்.

கணவன், மனைவியிடையே ஆரோக்கியமான விவாதங்கள் தோன்றி மறையும். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் மற்றும் தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். உங்களின் மீது ஏற்பட்ட அவப்பெயர்கள் நீங்கும்.

சனி ராசிக்கு பத்தாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். நிலையான வருமானம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள்.

பெரியோர்களின் சந்திப்பால் இழுபறியான சில செயல்களை செய்து முடிப்பீர்கள். நிலம் மற்றும் வீடு விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். விவசாய பணிகளில் சந்தை நிலவரங்களை அறிந்து அதற்கேற்ப பயிர்களைத் தேர்வு செய்வது நல்ல முன்னேற்றத்தை உருவாக்கும்.

பொருளாதாரம்

கிடைக்கும் சிறு வாய்ப்புகளிலும் குறைவில்லாமல் உங்கள் திறமையை வெளிப்படுத்துவது உங்களின் மீதான நம்பிக்கையையும், பொருளாதார மேன்மையையும் உருவாக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வீடு மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். செய்கின்ற முயற்சிக்கேற்ப வருமானம் மேம்படும். சுப விரயங்கள் உண்டாகும். ஆலோசனைகளின் மூலம் அவ்வப்போது சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் மூட்டு சார்ந்த வலிகளும், காது தொடர்பான பிரச்சனைகளும் மற்றும் குடல் சார்ந்த இன்னல்களும் கட்டுப்பாட்டுக்குள் வரும். குளிர்ச்சியான உணவுகளை குறைத்து கொள்ளவது நல்லது.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் முயற்சிகளில் இருந்துவந்த சோர்வும், பணி நிமிர்த்தமான பிரச்சனைகளும், சேமிப்பில் இருந்துவந்த தடைகளும் படிப்படியாக குறையும்.

கவனம்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் பயணம் சார்ந்த செயல்களிலும், நண்பர்களிடமும், பிறமொழி பேசும் மக்களிடமும் கவனத்துடன் செயல்படவும்.

பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபாடு செய்து வர நன்மை உண்டாகும். வெள்ளிக்கிழமைதோறும் ஆண்டாளை வழிபட மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் அகலும்.

பொதுப்பலன்களான இவற்றில் திசாபுத்திக்கு ஏற்ப மாற்றம் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.