சுக்கிரன் பலம் அதிகரிக்க | Sukran Palam Pera

சுக்கிரன் பலம் அதிகரிக்க | Sukran Palam Pera

ஜோதிடத்தில் சுக்கிரன் சுக போகங்களின் அதிபதியாக வருகிறார். சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர் சுக்கிர பகவான் தான். சுக்ரன் மனைவி யோகம் தருபவர். ஜாதகத்தில் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் ஒருவருடைய ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். சுக்கிரனின் திசை வருடங்கள் 20 வருடங்கள் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் அது கோடீஸ்வர யோகமாக அமைகிறது. சுக்கிரன் ஒருவருக்கு நல்ல நிலையில் இருந்தால் வசதியான மனைவி அமைவார்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனப்பட்டு இருந்தாலோ அல்லது நீசம், பகை, பகை கிரகங்களின் சேரக்கையுடன் இருந்தாலோ, அஸ்தங்கம் அடைந்து இருந்தாலோ சுக்கிரனால் கிடைக்கக் கூடிய நல்ல பலன்களிலும் பாதிப்புகள் உண்டாகும். இந்த பதிவில் அப்படி சுக்கிரன் பாதிக்கப்பட்டு இருந்தால், சுக்கிரனின் நற்பலன்களை அனுபவுக்க சுக்கிரனின் பலன் அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

சுக்கிரன் பலம் அதிகரிக்க

  • வெள்ளி மோதிரம், வெள்ளி செயின், வெள்ளி காப்பு போன்ற வெள்ளியால் ஆன அணிகலன்களை அணிந்து கொள்வதன் மூலம் சுக்கிரன் பலம் அதிகரிக்க முடியும்.
  • வெள்ளிக் கிழமையில் அம்மன் அல்லது அம்பாள் வழிபாடு செய்ய வேண்டும்.
  • வெள்ளி கிழமையில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புடைவை சார்த்தி குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தல்.
  • வீட்டிலேயே வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை வழிபாடு செய்தல்.
  • மஹாலக்ஷ்மி வழிபாடு நன்மை பயக்கும்.
  • மாகலக்ஷ்மி தேவிக்கு வெள்ளை தாமரை வைத்து வழிபாடு செய்திகள்.
  • சுக்கிர பகவானுக்கு உகந்த மொச்சையால் ஆன உணவுகளை சேர்த்துக் கொள்ளுதல்.
  • சுக்கிர பகவானுக்கு உகந்த மொச்சையால் ஆன உணவுகளை தானம் அளித்தல்.
  • மல்லிகை பூ சூடி கொள்ளுதல்.
  • மல்லிகை பூ, தாமரை பூ ஆகியவற்றால் அம்பாளை வழிபாடு செய்திகள்.
  • பட்டு நிற துணிகளை உடுத்துதல்.
  • திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் தாயார் வழிபாடு செய்ய வேண்டும்.
  • கஞ்சனூர் சென்று சுக்கிரன் பகவானையும் அம்பாளையும் தரிசிக்க வேண்டும். மாதம் ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது தரிசனம் செய்வது நல்லது.
  • நவ கிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று வெள்ளி கிழமையில் சுக்கிர பகவானுக்கு வெண் பட்டு துணி சாற்றி, மல்லிகை பூ மாலை சாற்றி, விளக்கேற்றி சுக்கிரனுக்கு உரிய துதிகளை சொல்லி வழிபாடு செய்தல்.
  • தினமும் சுக்கிர காயத்ரி மந்திரம் துதித்தல்.
  • மஹாலக்ஷ்மி மற்றும் அம்பாளுக்கு உரிய பாடல்களை பாடுதல் மற்றும் கேட்டல்.

மேலே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை கடைபிடிப்பதன் மூலமாக சுக்கிரன் பலம் அதிகரித்து நல்ல பலன்களை அடைய முடியும்.