12 ல் புதன் சுக்கிரன் சேர்க்கை | 12 il Sukran Puthan Serkai
ஜோதிடத்தில், கால புருஷ தத்துவப்படி 12 இல் களத்திர காரகன் ஆன சுக்ரன் உச்சம் அடைகிறது. அதே 12 ம் இடத்தில் புத்தி காரகன் புதன் நீசம் அடைகிறது. இவ்விரு கிரகங்களும் உச்சம் மற்றும் நீசம் அடைந்து 12 ம் பாவத்தில் நீச பங்க யோகத்தையும் கொடுக்கின்றனர்.
பொதுவாக உங்களுடைய ஜாதகத்தில், லக்னத்திற்கு 12 இல் புதனும் சுக்கிரனும் இணைந்து இருந்தால் அடையும் பொதுப் பலன்களை இப்போது பார்க்கலாம்.
கால புருஷ தத்துவப்படி பொதுப் பலன்கள்:
- அனைத்து சுக போகங்களையும் அனுபவிக்கும் யோகம்.
- விருப்பத்திற்கு ஏற்ப செலவு செய்யக் கூடிய வகையில் வருமான யோகம் உண்டு.
- மறை கலைகளில் ஞானம் உண்டாகும்.
- கலைத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
- வெளிநாடு செல்லும் யோகம், வெளிநாட்டில் வசித்தல் போன்ற அமைப்புகள் உண்டாகும்.
- கடல் கடந்து ஏற்றுமதி இறக்குமதி செய்திகள் போன்ற தொழில்கள் சிறக்கும்.
- திருமணத்திற்கு பிறகு வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.
- குறையற்ற இல்லற சுகம்.
- மனைவி வழியில் சொத்துக்களை அடையும் யோகம் உண்டாகும்.
- கணவன் மனைவி இடையே காதலும் புரிதலும் இணக்கமும் அதிகரித்து நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.
12 ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் | What if Sukran Graha in 12th house?