படுக்கையறைக்கான வாஸ்து வண்ணங்கள் | Bedroom Colors as per Vastu

உங்கள் வீட்டின் பெட்ரூமில் இருக்க வேண்டிய 5 வாஸ்து நிறங்கள்!

பொதுவாக வீடுகளில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறத்தை கொண்டு பெயிண்ட் அடித்திருப்போம். ஹால், சமையலறை, பூஜை அறை, பெட்ரூம் என ஒவ்வொரு அறையின் தன்மைக்கு ஏற்ப பெயிண்ட் அடிப்பது வழக்கம். அதே போன்று ஒவ்வொரு நிறங்களுக்கு பின்னும் ஒரு அறிவியல் பூர்வ காரணங்கள் இருக்கிறது. சில நிறங்கள் நம்மை சாந்தப்படுத்தும். சில நிறங்கள் நம்மை எரிச்சலூட்ட கூடிய வகையில் இருக்கும்.

நீல நிறம்:

பலருக்கும் பிடித்த நிறமாக நீல நிறம் உள்ளது. இது நேர்மறை ஆற்றலை கொண்ட நிறமாகும். வெளிர் நீல நிறத்தை உங்கள் பெட்ரூமில் பயன்படுத்தினால் அங்கு நிதானமும், அமைதியும் பெருகும்.மேலும் இந்த நிறம் பாசிட்டிவான எண்ணங்களை கொண்டு வந்து உங்கள் சோர்வைப் போக்கும்.

பிங்க் நிறம்:

பொதுவாக பிங்க் நிறத்தை அழகு நிறைந்த நிறம் என்று சொல்வார்கள். இது கணவன் மனைவி இருவருக்கும் நெருக்கத்தை தர கூடிய நிறமாகும். மேலும் இது நிறம் உங்கள் திருமண பந்தத்தை வலுப்படுத்த கூடிய ஒன்றாகவும் இருக்கும். எனவே உங்கள் பெட்ரூம் சுவர்களை வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் பெயிண்ட் அடித்து மகிழ்ச்சியாக இருங்கள்.

பச்சை நிறம்:

பச்சை நிறமானது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான நிறமாகும். அதே போன்று மனதிற்கும் ஏற்ற நிறமாகும். இது உங்கள் பெட்ரூமில் நிம்மதியான சூழலை உருவாக்க உதவுகிறது. பொதுவாக பெட்ரூமில் பச்சை நிறத்தை பயன்படுத்துவது பலருக்கு பிடிக்காது. இருப்பினும் நேர்மறையான எண்ணங்களை கொண்டு வர உங்கள் அறையில் பச்சை நிற தாவரங்களை வைத்து கொள்ளலாம். இதுவும் வாஸ்துப்படி உங்களுக்குள் நல்ல மாற்றத்தை தரும்.

பழுப்பு நிறம்:

இந்த நிறமானது ஓய்வையும், அழகிய தருணங்களையும் உருவாக்க கூடியது. பழுப்பு நிறத்தில் பெட்ரூம்மில் பெயிண்ட் அடிப்பதாலோ அல்லது அந்த நிறத்தில் முக்கிய பொருட்களை வைத்திருந்தாலோ தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதே போன்று உங்கள் வாழ்வில் சிறப்பான நினைவுகளை இது உருவாக்கும்.

வெள்ளை நிறம்:

பொதுவாக வெள்ளை நிறம் என்றால் பெரும்பாலோனருக்கு பிடித்த ஒன்றாக கருதப்படுகிறது. வெள்ளை என்பது தூய்மை மற்றும் அமைதியின் நிறம். வாஸ்து படி, வெள்ளை நிறம் திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வரும். குறிப்பாக கணவன், மனைவிக்குள் ஏற்படும் சண்டைகளையும் இது விலக்கி விடும்.